தூத்துக்குடியில் பயங்கரம்..!! கொட்டித் தீர்த்த கனமழை..!! மின்னல் தாக்கியதில் 4 இளைஞர்களுக்கு நிகழ்ந்த சோகம்..!!

Thunderstorm 2025

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று இடி மின்னலுடன் பெய்த மழையின்போது, கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த நான்கு இளைஞர்கள் மின்னல் தாக்கிப் படுகாயமடைந்தனர்.


கடந்த 3 நாட்களாக கோவில்பட்டி, கயத்தார், விளாத்திகுளம், சாத்தான்குளம், திருச்செந்தூர், ஆத்தூர், ஏரல், முக்காணி, முள்ளக்காடு, முத்தையாபுரம், ஓட்டப்பிடாரம், மணியாச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், நேற்றைய தினம் மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆத்தூர் பகுதிகளில் பலத்த இடி மின்னலுடன் மழை கொட்டித் தீர்த்தது.

இந்நிலையில், முள்ளக்காடு ராஜுவ்நகர் 2வது தெருவைச் சேர்ந்த தங்கமுத்து (18), அன்பரசன் (18), ஆனந்தகிருஷ்ணன் (17), பிரின்ஸ் (17) ஆகிய நான்கு இளைஞர்கள் முள்ளக்காடு, கோவளம் கடற்கரையில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அவர்கள் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென மின்னல் தாக்கியதில் நான்கு பேரும் படுகாயமடைந்தனர்.

மின்னல் தாக்கியதைக் கண்ட அருகில் கடலில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் உடனடியாக செயல்பட்டு, காயமடைந்த நான்கு இளைஞர்களையும் மீட்டுள்ளனர். பின்னர், 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் குறித்து தகவல் அறிந்த முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் (இன்ஸ்பெக்டர்) ஜீவமணிதர்மராஜ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மழை காலங்களில் இடி மின்னல் இருக்கும்போது நீர்நிலைகளுக்குச் செல்வதையோ, மரங்களின் கீழ் நிற்பதையோ தவிர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Read More : தொடர் கனமழை, வெள்ளப்பெருக்கு..!! தத்தளிக்கும் நேபாளம்..!! பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு..!!

CHELLA

Next Post

பிக்பாஸ் வீட்டில் முதல் நாளே ஏழரையை இழுத்த தற்பெருமை திவாகர்.. எச்சரித்த VJ பார்வதி.. கலாய்த்து விட்ட எஃப்.ஜே..!!

Mon Oct 6 , 2025
Water Milan Diwakar, who pulled a seven-and-a-half on the first day in the Bigg Boss house.. VJ Parvathy warned.. FJ made fun of him..!!
diwakar

You May Like