1990களில் தென்னிந்தியாவில் பல வெடிகுண்டு மற்றும் கொலை வழக்குகளில் தொடர்புடைய தீவிரவாதி அபுபக்கர் சித்திக், 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் திருநெல்வேலியைச் சேர்ந்த முகமது அலியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையை தமிழ்நாடு தீவிரவாத தடுப்பு பிரிவு (ATS) பல மாதங்களாக மேற்கொண்ட தீவிர கண்காணிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இருக்கிறது. இருவரும் தற்போது சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
முக்கிய வெடிகுண்டு வெடிப்பில் தொடர்பு:
1995: சென்னை சிந்தாதிரிப்பேட்டை இந்து முன்னணி அலுவலகத்தில் வெடிகுண்டு வெடிப்பு.
1995: நாகூர் தங்கம் முத்துக்கிருஷ்ணன் வீட்டில் பார்சல் குண்டு வெடிப்பு.
1999: சென்னை, திருச்சி, கோவை, கேரளா உள்ளிட்ட 7 இடங்களில் ஒரே நாளில் வெடிகுண்டு வெடிப்பு.
2011: மதுரை – திருமங்கலம் வழியாக சென்ற முன்னாள் பிரதமர் எல்.கே. அத்வானி ரதயாத்திரையை குறிவைத்த பைப் பாம் வழக்கு.
2012: வேலூர் மருத்துவர்கள் அரவிந்த்ரெட்டி கொலை வழக்கு.
2013: பெங்களூர் பாஜக அலுவலகம் மீது நடந்த வெடிகுண்டு தாக்குதல்.
30 ஆண்டுகளாக தமிழக போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், ரகசிய தகவலின் பேரில் ஆந்திராவில் போலீசார் கைது செய்துள்ளனர். அதேபோல், 1999-ல் தமிழகம் மற்றும் கேரளாவில் 7 இடங்களில் வெடிகுண்டுகள் வைத்த வழக்கில் 26 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளியான திருநெல்வேலி மேலப்பாளையத்தைச் சேர்ந்த முகமது அலி (எ) யூனுஸ் (எ) மன்சூரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து, சென்னை நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணை அடிப்படையில், இருவரும் தீவிரவாத தடுப்புப் படையினரால் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்தக் கைது, 1990களில் தென்னிந்தியாவை உலுக்கிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான முக்கிய நடவடிக்கையாகக் பார்க்கப்படுகிறது.
Read more: தோனியை விட 4 மடங்கு அதிக சம்பளம்!. RR கேப்டனுக்கு வலைவீசும் CSK?. உண்மை என்ன?.