Cancer: ஐரோப்பாவில் ஒரே நபரின் விந்தணுவில் கருத்தரித்த 67 குழந்தைகளில் 10 பேருக்கு புற்றுநோய் அபாயம் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பாவில் செய்யப்பட்ட ஒரு பரிசோதனையில் மிகப்பெரிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த பரிசோதனையில் 8 ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 46 குடும்பங்களைச் சேர்ந்த 67 குழந்தைகள் பரிசோதிக்கப்பட்டனர். அதில் ஒரே நபரின் விந்தணு மூலம் 67 பேர் கருத்தரித்துள்ளனர். அவர்களை பரிசோதனை செய்ததில் அந்த நபரின் விந்தணுவில் கருத்தரித்த குழந்தைகளில் 10 பேருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதில் கேன்சர் செல்களான ”லுகேமியா மற்றும் ஹாட்ஜ்கின்” அல்லாத ”லிம்போமா” பாதிப்பு வழக்குகளும் அடங்கும்.
அதாவது, கடந்த 2008 ஆம் ஆண்டு விந்தணு தானத்தின் போது இந்த பிறழ்வு நிகழ்ந்ததாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “நன்கொடை அளிக்கப்பட்டபோது இந்த அரிய மாறுபாடு புற்றுநோயுடன் தொடர்புடையதாகத் தெரியவில்லை. ஆனால் தானம் செய்தவரின் விந்தணுக்களில் சிலவற்றில் TP53 எனப்படும் மரபணு மாறுபாடு உள்ளது” என விந்தணுவை வழங்கிய ஐரோப்பிய விந்து வங்கி உறுதிப்படுத்தியது.
ஒரு டோனாரின் விந்தணுவை குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குழந்தைகளை உருவாக்க மட்டும் பயன்படுத்த வேண்டும் என்ற விந்து வங்கியின் விதி மீறப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட டோனாரின் விந்தணுக்களைப் பெற்ற அனைத்து மருத்துவமனைகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சுகாதார வல்லுநர்கள், TP53 மாறுபாட்டைக் கொண்ட குழந்தைகள் தீவிரமான, நீண்டகால மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர்.
Readmore: ஷாக்!. இந்தியாவில் ஓமிக்ரானின் 4 துணை வகைகள்!. 1000-ஐ கடந்தது கொரோனா பாதிப்பு!. ஐசிஎம்ஆர் தகவல்!