தைப்பூசம் 2026 : இன்று இப்படி விரதம் இருந்து, வழிபட்டால் முருகனின் பரிபூரண அருளை பெறலாம்..!

lord muruga

முருகப் பெருமான் அன்னை பராசக்தியிடம் இருந்து ஞானவேலை பெற்ற திருநாளே தைப்பூசம் ஆகும்.. இந்த ஆண்டு தைப்பூசம் இன்று கொண்டாடப்படுகிறது.. இந்த நாளில் எந்த நேரத்தி, எப்படி முருகப் பெருமனை வழிபட வேண்டும்? எப்படி வழிபட்டால் முருகப் பெருமானின் பரிபூரண் அருள் கிடைக்கும் என்று பார்க்கலாம்..


தை மாத வளர்பிறையில் பௌர்ணமி திதியும் பூசம் நட்சத்திரமும் இணைந்த நாள் தான் தைப்பூச நாளாக கொண்டாடுகிறோம்.. அதன்படி இந்த ஆண்டு தைப்பூச விழா இன்று பிப்ரவரி 1 கொண்டாடப்படுகிறது.. பிப்ரவரி 1-ம் தேதி அன்று காலை 4.41 மணி தொடங்கி பிப்ரவரி 2-ம் தேதி காலை 4.43 வரை பௌர்ணமி திதி உள்ளது..

அதே போல் இன்றைய தினம் அதிகாலை 1.54 மணி முதல் பிப்ரவரி 2-ம் தேதி அதிகாலை 1.01 வரை பூசம் நட்சத்திரம் உள்ளது.. பிப்ரவரி 1-ம் தேதி முழுவதும் பௌர்ணமியும் பூசம் நட்சத்திரமும் உள்ளதால் இன்று முழுவதும் தைப்பூர் வழிபாடு செய்ய உகந்த நாளாகும்

இன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்துவிட்டு முருகப்பெருமான் படத்திற்கு முன் விளக்கேற்றி வைத்து விரத்தை தொடங்கலாம்.. முருகனின் திருநாமங்களை சொல்லியபடி இருப்பதும் முருகனை சிந்தித்துக் கொண்டே இருப்பதும் நல்லது..

வீட்டில் முருகன் சிலை அல்லது வேல் இருந்தால் அதற்கு சந்தனம் குங்குமம் இட்டு, மலர்கள் சாற்றி அலங்காரம் செய்ய வேண்டும்.. இன்றைய தினம் வேலுக்கு அபிஷேகம் செய்து வேல் பூஜை செய்வதும் நல்லது..

செவ்வரளி, செவ்வந்தி, துளசி ஆகியவை படைத்து முருகனை வழிபடலாம்.. நைவேத்தியமாக தேன், திணை மாவு, தயிர் சாதம், பாயாசம், பொங்கல் இவற்றில் ஏதேனும் ஒன்றை வைத்து வழிபடலாம்.. அதிகம் முடியவில்லை என்றாலும் பால் அல்லது சந்தனம் மட்டுமாவது வாங்கிக் கொடுக்கலாம்.

மேலும் இன்று முருகன் படத்திற்கு முன் ஷ்ட்கோண கோலமிட்டு அதன் மீது 6 நெய் தீபங்கள் ஏற்றி வைத்து வழிபடலாம்.. வெற்றிலை தீபமும் ஏற்றபலாம்.. இன்றைய தினம் இரண்டு பேருக்காவது அன்னதானம் செய்யலாம்.. மேலும் அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்றும் வழிபடலாம்..

குழந்தை பாக்கியம் பெற, திருமண தடை விலக, நோய்கள் நீங்க, பகை விலக, கடன்கள் நீங்க, வியாபாரம் செழிக்க, குழந்தகள் கல்வியில் சிறக்க, நல்ல வேலை கிடைக்க என என்ன வேண்டுதல் இருந்தாலும் அதை முருகனிடம் மனமுருக வேண்டிக் கொண்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை.. தைப்பூசம் விரதம் இருப்பவர்கள் கோயிலுக்கு  சென்றோ அல்லது வீட்டிலேயே மாலையில் முருகனை வழிபட்டு விரத்தை நிறைவு செய்யலாம்..

Read More : திருமண தடை முதல் தீராத நோய் வரை..!! தைப்பூசத்தன்று முருகனை இப்படி வணங்கி பாருங்க..!! வீட்டில் வழிபட சரியான நேரம் எது..?

RUPA

Next Post

இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமையில் மத்திய பட்ஜெட் தாக்கல்..! முக்கிய தகவல்கள்..!

Sun Feb 1 , 2026
2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்ட், 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி, அதாவது இன்று மக்களவையில் தாக்கல் செய்யவுள்ளது. இந்த முறை, பிப்ரவரி 1 ஒரு ஞாயிற்றுக்கிழமையில் வருகிறது. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக மத்திய பட்ஜெட் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் தாக்கல் செய்யப்படுவது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும். வார இறுதி நாட்களில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது அரிதானது என்றாலும், இந்த முறை அது ஒரு […]
nirmala sitharaman 1

You May Like