காந்திய மக்கள் இயக்கம் தலைவராக இருந்த தமிழருவி மணியன் காமராஜர் மக்கள் கட்சி என பெயர் மாற்றினார்.. இந்த நிலையில் தனது கட்சியை அவர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உடன் இணைத்துள்ளார்..
ஈரோட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் தமிழருவி மணியன் காமராஜர் மக்கள் கட்சியின் இணைப்பு விழா நடந்தது.. ஈரோட்டில் தாமக தலைவர் ஜி.கே வாசன் தலைமையில் தனது கட்சியை அவர் இணைத்து கொண்டார்.. தமாகா தற்போது பாஜகவின் என்.டி.ஏ கூட்டணியில் உள்ளது..
இந்த விழாவில் பேசிய ஜி.கே வாசன் “ தமாகா உடன் காமராஜர் மக்கள் கட்சியும் ஒன்றாக இணைந்தது வருங்காலங்களில் அரசியல் களத்திற்கு வசந்த காலமாக இருக்கும்.. இரு பெயர்களாக இருந்தாலும் இரண்டும் இரு கண்கள்.. இது கூட்டுக்குடும்பங்கள் இணையும் விழா..” என்று தெரிவித்தார்..
Read More : களத்திற்கே வராதவர் களத்தை பற்றி பேசுவது நகைச்சுவையாக உள்ளது – விஜய் பேச்சுக்கு சீமான் பதிலடி..!



