கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று முன்தினம் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் உயிரிழந்தனர். தற்போது வரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசு ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. மத்திய அரசு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. தவெக சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 20 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் சம்பவத்தில் முறையாக விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று கூறி தவெகவின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், மதியழகன் உள்ளிட்ட 4 பேர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “கரூரில் கூட்ட நெரிசலால் ஏற்பட்ட உயிரிழப்புகளால் விஜய் துடிச்சு போயிருப்பார். பாதுகாப்பு விஷயத்தில் ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார். நம்மள நம்பி வந்தவங்க இறந்து போகணும்னு யாராச்சும் நினைப்பாங்களா? அரசியல் செய்வதற்கு இது நேரம் கிடையாது. இனி இது போல நடக்காமல் இருக்க பாத்துக்கணும்” என்றார்.
Read more: சாக்லேட்டுகளை விட இது தான் பற்களுக்கு மிகவும் ஆபத்தானது.. பிரபல பல் மருத்துவர் அட்வைஸ்!