பூட்டியிருந்த வீட்டுக்குள் கேட்ட அந்த சத்தம்..!! 3 சிறுவர்களுடன் சேர்ந்து 6 சிறுமிகள்..!! திருப்பூரில் திடுக்கிடும் சம்பவம்..!!

Drinks 2025

திருப்பூர் மாவட்டம் நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், நீண்ட நாட்களாக பூட்டியிருந்த வீட்டிற்குள் மர்ம நபர்களின் நடமாட்டம் இருப்பதாக அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் எழுந்தது. உள்ளே இருந்து சத்தமாகப் பேச்சுக்குரல்களும், கும்மாள சத்தமும் கேட்டதையடுத்து, பொதுமக்கள் வீட்டின் கதவை தட்டியுள்ளனர்.


கதவு திறக்கப்பட்டபோது உள்ளே இருந்த காட்சியைக் கண்டு அங்கிருந்தவர்கள் உறைந்து போயினர். சுமார் 15 முதல் 18 வயதிற்குட்பட்ட 6 சிறுமிகள் மற்றும் 3 சிறுவர்கள் என மொத்தம் 9 பேர் மது போதையில் தள்ளாடியபடி இருந்துள்ளனர். விசாரணையில், அங்குள்ள ஒரு சிறுமி தனது உறவினருக்கு சொந்தமான வீட்டின் சாவியைப் பயன்படுத்தி, தனது நண்பர்களை அழைத்து மது அருந்தியது அம்பலமானது.

இதையடுத்து, தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், போதையில் இருந்த மாணவர்களை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்ட பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளின் இந்த விபரீத செயலை கண்டு நிலைகுலைந்து போயினர். இதையடுத்து, மாணவர்களின் எதிர்காலம் மற்றும் கல்வி நலனைக் கருத்தில் கொண்ட காவல்துறையினர், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காமல், தீவிரமான எச்சரிக்கை மற்றும் மனநல ஆலோசனைகளை வழங்கி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

Read More : திமுகவில் வாரிசுப் போர்..!! கனிமொழி vs சபரீசன்..!! குடும்ப மோதலால் பரபரக்கும் தென் மாவட்டங்கள்..!!

CHELLA

Next Post

ஆதாரமற்ற கருத்துகள்.. ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்படும்: கிரண் ரிஜிஜு

Wed Feb 11 , 2026
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி அவையை தவறாக வழிநடத்தியதற்காகவும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்ததற்காகவும் அவர்களுக்கு எதிராக அரசாங்கம் உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல் செய்யும் என்று மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று (பிப்ரவரி 11) தெரிவித்தார். அமெரிக்காவுடனான சமீபத்தில் இறுதி செய்யப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சித்து ராகுல் காந்தி பேசியிருந்த […]
rijiju rahul

You May Like