Flash : “வருங்காலம்‌ நமதென்று காட்ட தீர்க்கமாகத்‌ திட்டமிடுவோம்‌..” தவெக பொதுக்குழுவுக்கு தேதி குறித்த விஜய்.. அதிரடி அறிவிப்பு..

20250214090756 Vijay

தவெக பொதுக்குழு கூட்டம் வரும் 5-ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ என்‌ நெஞ்சில்‌ குடியிருக்கும்‌ தோழர்களுக்கு, வணக்கம்‌. நம்‌ அரசியல்‌ பயணத்தில்‌ அர்த்தம்‌ பொதிந்த ஓர்‌ ஆழ்நீள்‌ அடரமைதிக்குப்‌ பிறகு, உங்களோடு பேசவும்‌ உங்களை அழைக்கவுமான ஒரு கடிதம்‌ இது. சூழ்ச்சியாளர்கள்‌, சூதுமதியாளர்கள்‌ ‘துச்சமாக எண்ணி நம்மைத்‌ தூறு செய்த போதினும்‌, அச்சமின்றி அத்தனையையும்‌ உடைத்தெறிந்துவிட்டு நம்‌ அன்னைத்‌ தமிழ்நாட்டு மக்களுக்காக ஆர்த்தெழ வேண்டிய தருணம்‌ இது.


தமிழக வெற்றிக்‌ கழகத்தின்‌ படைக்கலன்களாக நீங்கள்‌ இருக்கையில்‌, நம்மைக்‌ காக்கும்‌ கவசமாக நம்‌ தமிழ்நாட்டு மக்கள்‌ இருக்கையில்‌, அவர்களோடு நமக்குள்ள உறவை, அவர்களுக்கான குரலாகத்‌ தொடரும்‌ நம்‌ வெற்றிப்‌ பயணத்தை எவராலும்‌ தடுக்க இயலாது. இதை, நாம்‌ சொல்ல வேண்டியதே இல்லை. கடந்த ஒரு மாத காலமாக, தமிழக மக்களே இதை மவுன சாட்சியாக உலகிற்கு உரைத்துக்கொண்டிருக்கின்றனர்‌. சூழ்ச்சிகளாலும்‌ சூதுகளாலும்‌ நம்மை வென்றுவிடலாம்‌ என்று கனவு காணும்‌ எதிரிகளும்‌ இதை உணர்ந்தே உள்ளனர்‌.

கள நிலவரம்‌ நம்மை ஊக்குவிப்பதாக இருக்கையில் தான்‌, நமது அடுத்த அடியை இன்னும்‌ நிதானமாகவும்‌ அளந்தும்‌ தீர்க்கமாகவும்‌ நாம்‌ எடுத்து வைக்க வேண்டும்‌.
இத்தகைய சூழலில்‌, கழகத்தின்‌ அடுத்த கட்டத்‌ தொடர் நிகழ்வுகள்‌ மற்றும்‌ செயல்பாடுகள்‌ குறித்து விவாதிக்க வேண்டும்‌..

ஆகவே, இவை குறித்து முடிவுகள்‌ எடுக்கும்‌ பொருட்டு, கழகத்தின்‌ இதயமான பொதுக்குமுவின்‌ சிறப்புக்‌ கூட்டத்தைக்‌ கூட்ட முடிவு செய்துள்ளோம்‌. அதன்படி, வருகிற 05.11.2025 புதன்கிழமை அன்று, நம்‌ தமிழக வற்றிக்‌ கழகத்தின்‌ சிறப்புப்‌ பொதுக்குழு கூட்டம்‌, மாமல்லபுரம்‌ ஃபோர்‌ பாயிண்ட்ஸ்‌ பை ஷட்டன்‌ ஹோட்டலில்‌ காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது. வாருங்கள்‌, சிறப்புப்‌ பொதுக்குழுவில்‌ கூடுவோம்‌. வருங்காலம்‌ நமதென்று காட்ட, தீர்க்கமாக திட்டமிடுவோம்‌. நல்லதே நடக்கும்‌. வெற்றி நிச்சயம்‌.” என்று பதிவிட்டுள்ளார்.

RUPA

Next Post

காதலியின் அந்தரங்க வீடியோவை பார்த்து ரசித்த காதலன்..!! ஹார்ட் டிஸ்கில் பல பெண்களின் வீடியோ..!! அடுத்து நடந்த பயங்கரம்..!!

Wed Oct 29 , 2025
வடக்கு டெல்லியின் திமார்பூர் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில், வசித்து வந்த இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் லிவிங் பார்ட்னர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மாநிலம் திமார்பூர் பகுதியைச் சேர்ந்த ராம்கேஷ் மீனா (32) என்ற இளைஞர், கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி, தனது வீட்டில் தீயில் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். முதலில் விபத்து என சந்தேகிக்கப்பட்ட […]
Video 2025 1

You May Like