தவெக மதுரை மாநாடு.. விதவிதமாக ரெடியாகும் ஸ்னாக்ஸ்! என்னென்ன இருக்கு தெரியுமா?

TVK Snacks

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தவெக தனது முதல் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது.. அக்கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்தும் பணியில் விஜய் ஈடுபட்டு வருகிறார்.. அந்த வகையில் தவெகவின் 2வது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் நாளை நடைபெற உள்ளது.. 500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள மாநாட்டுத் திடலில் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன.. 1.5 லட்சம் இருக்கைகள், 200 அடி நீளத்திற்கு பிரம்மாண்ட மேடை, 800 அடி நீளத்திற்கு ராம்ப் வாக் மேடை என மதுரையே களைக்கட்டி உள்ளது..


இந்த நிலையில் தவெக தொண்டர்களுக்கு கொடுப்பதற்காக 5 லட்சம் ஸ்னாக்ஸ் பாக்கெட் தயாராகி வருகிறது.. அதில் 500 ml தண்ணீர் பாட்டில், பிஸ்கட், மிக்ஸர் மற்றும் சிறிய குளுக்கோஸ் பாக்கெட் ஒன்றும் வழங்கப்பட உள்ளது.. கடுமையான வெயிலை சமாளிக்கும் வகையில் இந்த முறை குளுக்கோஸ் பாக்கெட் வழங்கப்பட உள்ளது.. இந்த ஸ்னாக்ஸ் ஒரு சிறிய பையில் கட்டப்பட்டு, நாளை மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.. மேலும் மாநாட்டு திடலுக்குள் சுமார் 1.5 லட்சம் நாற்காலிகள் போடப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு நாற்காலியிலும் இந்த ஸ்னாக்ஸ் பாக்கெட்கள் வைக்கப்படும் என்று கூறப்படுகிறது..

இந்த வாட்டர் பாட்டில் தமிழக வெற்றிக்கழகம், மதுரை மாநாடு என்று அச்சிடப்பட்டுள்ளது.. நாளை நடைபெற உள்ள இந்த மாநாட்டில் சுமார் 5 லட்சம் பேர் பங்கேற்கார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், 5 லட்சம் ஸ்னாக்ஸ் பாக்கெட்களை பேக் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது..

இதனிடையே தவெக மாநாட்டு திடலில் நடப்பட்ட கொடிக்கம்பம் சாய்ந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.. 100 அடி கொடிக்கம்பம் சாய்ந்த போது அருகில் நின்றவர்கள் தள்ளிச்சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.. இந்த கொடிக்கம்பம் சாய்ந்த விழுந்த விபத்தில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் நொறுங்கியது.. கிரேன் மூலம் கொடிக்கம்பத்தை நிறுவ முற்பட்ட போது அது சாய்ந்து விழுந்ததது.. இதனால் அங்கிருந்த தவெகவினர் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.. கொடிக்கம்பத்தை நிறுத்தக்கூடிய போல்ட்கள் சரியாக பொருத்தப்படாததால் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.. 

Read More : #Breaking : தவெக மாநாடு.. 100 அடி கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்து விபத்து.. அப்பளம் போல் நொறுங்கிய கார்..! உயிர்தப்பிய தவெகவினர்!

RUPA

Next Post

18 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் ராஜ யோகம்.. பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்..!

Wed Aug 20 , 2025
கிரக அமைப்பில், கிரகங்கள் ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு தொடர்ந்து நுழைந்து கொண்டே இருக்கின்றன. இத்தகைய பிரவேசத்தால், சில நல்ல பலன்கள் கிடைக்கும். ஒரு கிரகம் மற்றொரு கிரகத்துடன் சேரும்போது, சில அற்புதமான யோகங்கள் உருவாகின்றன. இது தனிநபர்களை மட்டுமல்ல, சமூகத்தையும் உலகத்தையும் பாதிக்கிறது. அந்த வகையில், செப்டம்பர் மாதத்தில், சுக்கிரன் சிம்ம ராசியில் பிரவேசிக்க உள்ளார்.. கேது ஏற்கனவே சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். எனவே, சுக்கிரன்-கேது சேர்க்கை விரைவில் […]
Raja yogam

You May Like