தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. ஒருபுறம் திமுக கூட்டணி அப்படியே தொடர்கிறது.. மறுபுறம், அதிமுக பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ளது.. ஆனால் விசிக, கம்யூனிஸ்ட், நாதக, தவெக என அனைத்து கட்சிகளுக்கும் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்தார்.. ஆனால் எந்த கட்சியும் அவரின் அழைப்பை ஏற்கவில்லை.. தவெக தலைமையில் தான் கூட்டணி என்று விஜய் அறிவித்துவிட்டார்.. தனித்தே போட்டி என்று நாதக கூறிவிட்டது..
எனினும் பாஜக – அதிமுக- தவெக கூட்டணியில் இணைந்தால் திமுகவுக்கு டஃப் கொடுக்க முடியும் என்று சிலர் கூறுகின்றனர்.. ஆனால் தேர்தலுக்கு முன்பே விஜய்யின் உண்மை முகம் வெளிவரும் என்று திமுக செய்தித்தொடர்பாளர் ராஜா தமிழ்மாறன் தெரிவித்துள்ளார்..
இதுகுறித்து பிரபல யூ டியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர் “ தேர்தலுக்கு முன்பே விஜய்யின் உண்மை முகம் வெளிவரும்.. ஆற்றல்மிக்க தலைவராக விஜய் இதுவரை நடந்து கொண்டதில்லை.. ஒரு 5 நிமிடம் ஷூட்டிங் முடிப்பது போல் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு ஓடுகிறார்.. அவர்களின் கட்சியின் கொள்கை தலைவர்கள் பற்றியே அவருக்கு முழுமையாக தெரியாது.. பெரியார் இந்த மக்களுக்காக என்ன சொல்லி இருக்கிறார் என்று சொல்ல சொல்லுங்கள்ள்.. அதை கூட அவரால் சொல்ல முடியாது.. காமராஜர் ஏன் ராஜாஜியை எதிர்த்தார் என்பதெல்லாம் விஜய்க்கு தெரிய வாய்ப்பில்லை..
பாஜகவின் ஜாம்பி வெர்சன் தான் விஜய்.. அவ்வளவு தான்.. அமித்ஷா அண்ட் கம்பெனி தாங்கள் டிசைன் பண்ண ஒரு தயாரிப்பை ஏவி விட்டுள்ளனர்.. ஆனால் தமிழ்நாட்டு மக்கள் சாதாரண மக்கள் கிடையாது.. திமுக என்பது ஒரு கட்சியாக மட்டும் பார்க்க முடியாது.. தமிழக மக்களின் நலனுக்காக செயல்படும் அறம் சார்ந்த குழுவாக திமுக உள்ளது.. திமுக கூட்டணி வலுவாக உள்ளது..
தவெகவினருக்கும் அரசியல் புரிதலே இல்லை.. அரசியல் கட்சியாக செயல்படவில்லை.. சினிமா மோகமுள்ள இளைஞர்கள் கூடியுள்ள பட்டாளம்.. இது வாக்குகளாக மாறுமா என்றால் தான் சந்தேகம்.. எனவே தேர்தலுக்கு முன்பே விஜய்யின் முகத்திரை கிழியும்.. அவரால் ஒரு கட்சியை வழிநடத்த முடியாது..
இந்த ஒரே ஒரு தேர்தல் இரண்டு பேருக்கு முற்றுப்புள்ளி வைக்கும். எடப்பாடி பழனிசாமியின் அரசியலை முடித்து வைக்கும் தேர்தலாக இந்த தேர்தல் இருக்கும்.. விஜய், ஏண்டா இதற்குள் வந்தோம் என்று வருத்தப்படும் தேர்தலாக இது இருக்கும்..
இபிஎஸ்-க்கு ஆரம்பத்தில் இருந்தே கொள்கை தெரியாது, பெரியாரை பற்றி பேசியோ அல்லது ஜெயலலிதாவை பற்றி பேசியோ கட்சியை வளர்த்தவர் இல்லை.. தலைமைத்துவப் பண்பு இல்லாமல், கொள்கை சார்ந்த விஷயங்களை பேசாமல், தமிழ்நாட்டு நலன் சார்ந்து எதையும் செய்யாமல் திமுகவை குறைசொல்லிவருகிறார்.. இதனால் எதுவும் ஆகப்போவதில்லை என்பது அவருக்கு தெரியவில்லை..
10 தேர்தலில் தோல்வியடைந்த இபிஎஸ்-க்கு 11வது தோல்வியும் வரும்.. இது தான் அவர்களின் இறுதி தேர்தல்.. விஜய் அவர்களுடன் சேர்ந்தாலும் இது தான் தலையெழுத்து.. சேரவில்லை என்றாலும் இதுதான் தலையெழுத்து…” என்று தெரிவித்தார்..