நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மரங்களின் மாநாட்டை நடத்தினார்.. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே, அருங்குளம் கூட்டுச்சாலை மனிதநேய பூங்கா வெற்றி தோட்டத்தில் நடைபெற்றது.. இந்த மாநாட்டில் பேசிய அவர் “ இந்த பூமியை சமநிலைப்படுத்துவதில் மரத்தின் பங்கு மகத்தானது.. இயற்கையின் படைப்பு பெரிய வியப்பு.. எல்லா உயிர்களும் ஆக்ஸிஜனை சுவாசித்து நச்சுக்காற்றை வெளியிடும்.. மரங்கள், தாவரங்கள் மட்டும் தான் நச்சுக்காற்றை சுவாசித்து விட்டு ஆக்ஸிஜனை வெளியிடும்.. அதனால் நாம் உயிர் வாழ்கிறோம்.. காற்று மாசுப்பட்டதா? நாம் காற்றை மாசுப்படுத்தினோமா?
மரங்கள் இல்லை எனில் உலகில் யாரும் வாழ முடியது.. மரங்கள் என்றால் நம் உயிர்.. மரம் நம் தாய்.. மரத்திற்கு உயிர் உள்ளது.. அதனை வெட்டிக்கூடாது.. இதை நான் சொன்னால் நீ சிரிப்ப.. அதே கருத்தை என் தம்பி சூர்யா சொன்னால் நீ ரசிப்ப.. அதுக்குன்னு மறுபடியும் நடித்து, நடித்த சொல்ல முடியும்.. நல்லக்கண்ணு பிறந்த வாழ்ந்த மண்ணில், அவர் யாரென்று தெரியாததால் தான் நடிகன் நாடாள துடிக்கின்றான்.. கலையை கொண்டாடலாம்.. அதை எங்கே வைக்க வேண்டும் அங்கு வைக்க வேண்டும்.. இந்த நாட்டில் சாதி, மதம், மதுவுக்கு எதிராக போராடும் கூட்டம் இருக்கும்.. இந்த 3 போதைகளுக்கு இணையான போதை திரை போதை..
ஒப்பனை அழித்த உடனே அரியணை.. நடிப்பதை நிறுத்தினால் நாட்டை தருவோம் ஆள்வதற்கு என்பதை தமிழன் ஏற்க முடியுமா? இந்த நாட்டில் என்னை எதிர்ப்பவன் எல்லோருக்கும் சேர்த்து தான் இதை பேசுகிறோம்.. காட்டுக்குள் புலி நுழைந்த உடன் ஒரு அணிலை காணவில்லை.. அணிலுக்கும் சேர்த்து தான் காடுகளை வளர்க்க போராடுகிறோம்.. ஒரு கார் வெளியிடும் நச்சுப் புகையை தேவையை 6 மரங்கள் தேவை.. ஆனால் இங்கு எத்தனை மரம் இருக்கிறது.. நான் முதல்வரானால் மரத்தை வெட்டினால் சிறைக்கு அனுப்பி விடுவேன்.. எத்தனை தலைவர்கள் தங்கள் பிறந்தநாளுக்கு மரம் நட்டனர்?” என்று பேசினார்..