அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது..
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்ய நிலையில், இந்த வழக்கை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் பரிந்துரையின் பேரில் ஞானசேகரன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இது தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கைத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அதே சமயம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகச் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர், தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.. வன்கொடுமை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் குண்டர் சட்டம் ரத்து என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. ஞானசேகரின் தாயார் கங்கா தேவி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது..



