சமீர் வான்கடே தொடர்ந்த அவதூறு வழக்கில் ஷாருக்கான் ரெட் சில்லிஸ் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனங்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
The Ba**ds of Bollywood சீரிஸ் தொடர்பாக ஷாருக்கான் மற்றும் கௌரி கானின் நிறுவனமான ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட், நெட்ஃபிளிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது ஐஆர்எஸ் அதிகாரி சமீர் வான்கடே மனு ஒன்றை தாக்கல் செய்தார்.. அந்த மனுவில் ” The Ba**ds of Bollywood வலைத்தொடர் போதைப்பொருள் எதிர்ப்பு அமலாக்க நிறுவனங்களின் தவறான மற்றும் எதிர்மறையான சித்தரிப்பைப் பரப்புகிறது, இதன் மூலம் சட்ட அமலாக்க நிறுவனங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை சிதைக்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.
அதிகாரி மற்றும் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் தொடர்பான வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளதால், மும்பை உயர் நீதிமன்றம் மற்றும் மும்பையில் உள்ள NDPS சிறப்பு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டில் உள்ளதால், இந்தத் தொடர் வேண்டுமென்றே திட்டமிடப்பட்டு, வான்கடேவின் நற்பெயருக்கு ஒரு பாரபட்சமான மற்றும் சாயமிடும் வகையில் அவதூறு ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று இந்த மனு மீதான விசாரணை இன்று டெல்லி உயர்நீதிம்ன்றத்தில் நடைபெற்றது. அப்போது நெட்ஃபிளிக்ஸ் மற்றும் ரெட் சில்லிஸ் ஆகிய இரு நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. வான்கடேவின் மனுவிற்கு பதில் அளிக்க நெட்ஃபிளிக்ஸ் மற்றும் ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை இன்னும் பிறப்பிக்கவில்லை என்றாலும், பல வலைத்தளங்களிலிருந்து அவதூறான உள்ளடக்கத்தை நீக்க வேண்டும் என்ற வான்கடேவின் மனுவுக்கு பிரதிவாதிகள் தங்கள் பதில்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கோரியது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, வான்கடே தனது மனுவில் ரூ.2 கோடி இழப்பீடு கோரியுள்ளார். அதை அவர் டாடா மெமோரியல் புற்றுநோய் மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்க திட்டமிட்டுள்ளார்.
Read More : Flash : நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட சீமான்! நடிகை தொடர்ந்த வழக்கை ரத்து செய்த உச்சநீதிமன்றம்!



