ராமநாதபுரத்தில் அரசு சார்பில் நலத்திட்ட விழா நடைபெற்றது.. அப்போது முடிவுற்ற பல திட்டங்களை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், பல புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.. அப்போது ராமநாதபுரத்தில் கடந்த 4 ஆண்டுகளில் செய்யப்பட்ட நலத்திட்டங்களை பட்டியலிட்டு பேசினார்.. மேலும் தமிழ்நாடு மீனவர்களை காக்க ஒன்றிய அரசு எதுவும் செய்யவில்லை என்று முதல்வர் குற்றம்சாட்டினார்..
தொடர்ந்து பேசிய அவர் “ ஜிஎஸ்டியால் நிதி உரிமை போய்விட்டது.. சிறப்பு திட்டங்கள் எதையும் அறிவிக்கமாட்டார்கள்.. பிரதமர் பெயரிலான ஒன்றிய அரசு திட்டங்களுக்கு கூட நமது அரசு தான் படியளக்க வேண்டும்.. பள்ளிக்கல்விக்கான நிதியை ஒதுக்க மாட்டார்கள்.. நீட், தேசிய கல்விக் கொள்கை என கல்வியின் வளர்ச்சிக்கு தடை.. கீழடி அறிக்கைக்கு தடை.. தொகுதி மறுவறை என தமிழ்நாட்டிற்கு வஞ்சகம் செய்வதையே ஒன்றிய பாஜக அரசு வழக்கமாக செய்து கொண்டிருக்கிறது..
தமிழ்நாட்டில் 3 முறை மிகப்பெரிய பேரிடர் தாக்கி, ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட போதெல்லாம் உடனே வந்து நிதி தராத ஒன்றிய அமைச்சர் இப்போது கரூருக்கு மட்டும் உடனே வருகிறார்.. மணிப்பூர் கலவரம், குஜராத் விபத்துகள், கும்பமேளா பலிகளுக்கெல்லாம் உடனே விசாரணை குழு அனுப்பாத பாஜக கரூருக்கு மட்டும் உடனே அனுப்புகிறார்கள் என்றால், தமிழ்நாட்டு மேல் அக்கறையால் கிடையாது.. அடுத்த ஆண்டு தேர்தல் வருகிறது.. இதில் ஏதாவது அரசியல் ஆதாயம் கிடைக்குமா? இதை வைத்து யாரையாவது மிரட்டலாமா உருட்டலாமா என்று பார்க்கிறார்கள்.. யாருடைய ரத்ததையாவது உறிஞ்சு உயிர் வாழ துடிக்கும் ஒட்டுண்ணியாக தான் பாஜக இருக்கிறது.. மாநில நலன்களை புறக்கணித்து, மாநில உரிமைகளை பறித்து, மாநிலங்களே இருக்கக் கூடாது என்று செயல்படும் ஒன்றிய பாஜக அரசுடன் அதிமுக கூட்டணி வைத்துக் கொண்டு அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டனர்..
தவறு செய்தவர்கள் அடைக்கலமாகி, தங்கள் தவறுகளில் இருந்து தப்பிக்க நினைப்பவர்களுக்கு வாஷிங் மெஷின் தான் பாஜக.. கூட்டத்திற்கு கூட்டம், மேடைக்கு மேடை கூட்டணிக்கு வருவார்களா என அசைன்மண்டை தான் எடப்பாடி பழனிசாமியிடம் பாஜக கொடுத்துள்ளது. தமிழ்நாட்டு நலன் மேல் உண்மையான அக்கறை கொண்ட யாரும் பாஜக கூட்டணிக்கு செல்ல மாட்டார்கள்.. ஆர்.எஸ்.எஸ் பாதையில் வேகமாக நடைபோடுகிறது பாஜக.. தமிழ்நாட்டையும் தமிழ்நாட்டு மக்களையும் காக்கின்ற இந்த பணி அடுத்து அமைய உள்ள திராவிட மாடல் 2.0 ஆட்சியிலும் தொடரும்..” என்று தெரிவித்தார்..
Read More : Flash : ஹேப்பி நியூஸ்.. ஒரே நாளில் ரூ.880 குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் நிம்மதி..



