வெளியுறவுத்துறையின் கீழ் செயல்படும் எல்லை பாதுகாப்புப் படை (BSF), 2025-ம் ஆண்டிற்கான விளையாட்டு கோட்டா அடிப்படையில் கான்ஸ்டபிள் (Constable) பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 549 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பணியிட விவரம்:
ஆண்கள் – 277 பணியிடங்கள்
பெண்கள் – 272 பணியிடங்கள்
விளையாட்டுப் பிரிவுகள்: அம்பு எய்தல், தடகளப் போட்டிகள், கூடைபந்து, குத்துச்சண்டை, சைக்கிளிங், கால்பந்து, கைப்பந்து, ஹாக்கி, கபடி, ஜூடோ, கராத்தே, துப்பாக்கி சுடுதல், பளுதூக்குதல், நீர் சார்ந்த விளையாட்டுகள், யோகா, வுஷூ, வாட்டர் போலோ, மல்யுத்தம், டேக்வாண்டோ, டேபிள் டென்னிஸ், நீச்சல், செபக் டக்ரா, ஜிம்னாஸ்டிக்ஸ், ஃபென்சிங், குதிரையேற்றம் மற்றும் பூப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளில் சாதனைப் படைத்தவர்கள் தகுதியானவர்கள்.
யார் விண்ணப்பிக்கலாம்?
தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள்
சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கம் பெற்றவர்கள்
சர்வதேச போட்டிகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்றவர்கள்
வயது வரம்பு: எல்லை பாதுகாப்புப் படையில் கான்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பிக்க 01.08.2025 தேதியின்படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபடியாக 23 வயது வரை இருக்கலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் தளர்வு வழங்கப்படுகிறது.
கல்வித்தகுதி: விண்ணப்பதார்கள் கட்டயாம் 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு நிகரான கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: கான்ஸ்டபிள் பதவிக்கு தேர்வாகும் நபர்களுக்கு நிலை 3 கீழ் ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். மத்திய அரசு ஊழியர்களுக்கான இதர சலுகைகளும் இப்பணிக்கு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதார்களின் விளையாட்டு சாதனைகள், உடற்தகுதி மற்றும் மருத்துவத் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். எந்தெந்த போட்டிகளில் எவ்வளவு பதக்கங்கள், சாதனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பெண்கள் அளிகக்ப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது? விண்ணப்பிக்க ஆர்வமாக உள்ளவர்கள் https://rectt.bsf.gov.in/ என்ற எல்லை பாதுகாப்புப் படையில் அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.01.2026.
Read more: பயணிகளுக்கு ஷாக் நியூஸ்..! இன்று முதல் ரயில் டிக்கெட் விலை உயர்வு அமல்! எவ்வளவு தெரியுமா?



