பெங்களூருவை சேர்ந்த ஒரு பெண்மணி, தனது 23 வயது மகளுடன் வசித்து வந்துள்ளார். படிப்பு தேவைக்காக தனது மகளுக்கு அவர் செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளார். ஆனால், அந்த இளம்பெண் தனது காதலனுடன் மணிக்கணக்கில் செல்போனில் பேசி வந்ததை அறிந்த தாய், கண்டிக்கும் விதமாக மகளின் செல்போனைப் பறிமுதல் செய்துள்ளார்.
சில நாட்களுக்குப் பிறகு அந்த செல்போனை சரிபார்த்தபோது, அதில் இருந்த காட்சிகளை கண்டு அவர் நிலைகுலைந்து போனார். அந்த இளம்பெண், தனது தாய்க்கும், பெண் உறவினருக்கும் தெரியாமல், அவர்களது ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பல்வேறு கோணங்களில் எடுத்துத் தனது காதலனுக்குப் பகிர்ந்துள்ளது அம்பலமானது.
இதற்கிடையே, வீட்டாருக்கு தெரியாமல் அந்த ஜோடி ரகசியத் திருமணமும் செய்துகொண்டுள்ளது. மகளின் இந்த விபரீதச் செயலால் மன உளைச்சலுக்கு ஆளான அந்தத் தாய், காவல்துறையில் புகார் அளித்தார். தற்போது மகளையும் அவரது கணவரையும் பிடித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், அவர்களது செல்போன்களை தடயவியல் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். குற்றச்சாட்டுகள் உறுதிசெய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.



