வடக்கு டெல்லியின் திமார்பூர் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில், வசித்து வந்த இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் லிவிங் பார்ட்னர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி மாநிலம் திமார்பூர் பகுதியைச் சேர்ந்த ராம்கேஷ் மீனா (32) என்ற இளைஞர், கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி, தனது வீட்டில் தீயில் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். முதலில் விபத்து என சந்தேகிக்கப்பட்ட இந்த வழக்கை, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அறையில் சோதனை செய்தபோது, ராம்கேஷ் மீனாவின் ஹார்ட் டிஸ்கில் 15-க்கும் மேற்பட்ட பெண்களின் நிர்வாணப் புகைப்படங்கள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர், இது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
காதலியின் அதிர்ச்சி வாக்குமூலம் :
ராம்கேஷ் மீனாவுடன் அம்ரிதா என்ற காதலி லிவிங் பார்ட்னராக வசித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. ராம்கேஷ் மீனாவின் வீட்டிற்கு ஒரு இளம் பெண் வந்து சென்றதற்கான தடயங்கள் கிடைத்த நிலையில், அம்ரிதாவைக் கைது செய்து விசாரித்தபோது பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. அம்ரிதா அளித்த வாக்குமூலத்தில், தனது முன்னாள் காதலன் மற்றும் அவரது நண்பர் ஆகியோருடன் சேர்ந்து ராம்கேஷ் மீனாவைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும், கொலைக்குப் பிறகு அதை விபத்து போல் காட்டவே உடலுக்குத் தீ வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
கொலைக்கான காரணம் குறித்து அம்ரிதா கூறுகையில், “ராம்கேஷ் மீனாவின் செல்போன் மற்றும் ஹார்ட் டிஸ்கில் எனது படங்களுடன் சேர்த்து, சுமார் 15-க்கும் மேற்பட்ட பெண்களின் நிர்வாணப் படங்கள் இருந்தன. அந்தப் படங்களை உடனடியாக அழிக்க வேண்டும் என்று நான் பலமுறை வலியுறுத்தியும் அவர் மறுத்துவிட்டார். அதனாலேயே, ஆத்திரத்தில் அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
ராம்கேஷ் மீனா பல பெண்களின் நிர்வாணப் படங்களைச் சேமித்து வைத்து அடிக்கடி பார்த்து ரசித்து வந்ததே அவரது கொலைக்குக் காரணமாக இருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அம்ரிதா உட்பட 3 பேரையும் கைது செய்துள்ளனர்.
Read More : பெண் குழந்தைகள் பிறந்தால் ஆணாக மாற்றும் பெற்றோர்கள்..!! இப்படி ஒரு விநோத பழக்கமா..? எங்கு தெரியுமா..?



