லிவ்-இன் பார்ட்னரை கொன்று பல துண்டுகளாக வெட்டி வீசிய காதலன்..!! மும்பை குடியிருப்பில் பயங்கரம்..!! நடந்தது என்ன..?

மகாராஷ்டிராவில் உள்ள மீரா ரோடு நகரில் வாடகைக்கு தங்கியிருந்த வீட்டில் 32 வயது பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு அவரது உடலை துண்டு துண்டாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலையானது கடந்த 2-3 நாட்களுக்கு முன்பு நடந்திருக்கலாம் என்றும், அந்த பெண்ணை அவரது லிவ் – இன் பார்ட்னர் கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 56 வயதான மனோஜ் சஹானி என்ற நபர் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக 32 வயதான சரஸ்வதி வைத்யாவுடன் மீரா ரோடு பகுதியின் கீதா ஆகாஷ் டீப் கட்டிடத்தின் ஜே பிரிவில் உள்ள பிளாட் 704 ல் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார்.


இந்நிலையில், மூடப்பட்ட குடியிருப்பில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் சிலர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில், நயநகர் காவல் நிலையத்தை சேர்ந்த ஒரு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டை உடைத்தனர். இதன் காரணமாகவே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. உள்ளே வந்த போலீசார் சோதனை மேற்கொண்டபோது, கொலை செய்யப்பட்ட சரஸ்வதி பல துண்டுகளாக வெட்டப்பட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளார். மேலும், அவரது சில பாகங்கள் அப்புறப்படுத்தப்பட்டதாகவும் தெரியவந்தது.

இதையடுத்து, மனோஜ் சஹானி தனது குடியிருப்பில் இருந்து தப்பிச் செல்ல முயன்றபோது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து மும்பை துணை போலீஸ் கமிஷனர் ஜெயந்த் பஜ்பலே கூறுகையில், “மீரா ரோடி பகுதியில் உள்ள ஒரு சொசைட்டியில் இருந்து துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு ஜோடி லிவ்-இன் உறவில் வாழ்ந்து வந்தனர். முதற்கட்ட விசாரணையில், பெண் வெட்டிக் கொல்லப்பட்டது தெரியவந்தது. மேலும் விசாரணை நடந்து வருகிறது” என்றார்.

CHELLA

Next Post

'அவர மாதிரி ஒருத்தர எடுக்காம' - பாண்டிங் சொல்வதென்ன?

Thu Jun 8 , 2023
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் ஆடும் லெவனில் அஸ்வினை எடுக்காததற்கு, தலைமை பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மாவை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் விமர்சித்துள்ளார். மேலும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி மற்றும் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் உள்ளிட்டோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் […]
WhatsApp Image 2023 06 08 at 14.41.12

You May Like