முதலிரவில் ஒன்றாகத் தூங்கக்கூடாது என்ற விசித்திர பாரம்பரியத்தை சொன்ன மணப்பெண்! கடைசியில் நடந்த ட்விஸ்ட்! மணமகனுக்கு ஷாக்!

first night groom

ஆடம்பரமான திருமணத்திற்குப் பிறகு, தனது கணவரின் வீட்டிற்கு வந்த மணப்பெண், நகைகள், பணத்தை திருடிவிட்டு ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. இந்த சம்பவம் ராஜஸ்தானின் கிஷன்கரில் நடந்தது.. திருமணத்திற்குப் பிறகு மணமகள் கிஷன்கரில் உள்ள தனது கணவரின் வீட்டிற்கு சென்றார்.. அங்கு சென்றதும், தனது குடும்பத்தில் உள்ள ஒரு விசித்திரமான வழக்கத்தைப் பற்றி அவரிடம் கூறினார். அதாவது முதல் இரவில் கணவனும் மனைவியும் ஒன்றாகத் தூங்கக்கூடாது என்று அவர் கூறினார். மணமகளின் வார்த்தைகளை நம்பிய கணவர், முதல் இரவில் தரையில் தனியாகத் தூங்கினார்.


மணமகன் காலையில் எழுந்ததும், தனது மனைவி வீட்டில் இல்லை என்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மணமகள் காணாமல் போனதைக் கண்டு, அந்த இளைஞன் குடும்பத்தினருக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். மணமகளைப் பற்றி விசாரித்தபோது, ​​அவர் ஒரு தரகருடன் சேர்ந்து தங்கம் மற்றும் பணத்துடன் ஓடிப்போனது தெரியவந்தது.

இடைத்தரகராகச் செயல்படும் தரகர், ஆக்ராவைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணுடன் பாதிக்கப்பட்ட இளைஞரின் திருமணத்தை ஏற்பாடு செய்திருந்தார். திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகு, அவர் தரகருக்கு ரூ.2 லட்சம் கமிஷன் கொடுத்திருந்தார். ஜெய்ப்பூரில் திருமணம் மிகவும் ஆடம்பரமாக நடைபெற்றது. கிஷன்கரில் உள்ள தனது வீட்டிற்கு வந்தவுடன், அந்த விசித்திரமான பாரம்பரியம் பற்றி அவரிடம் கூறினார். அந்த நேரத்தில், ஜிதேஷ் மீது எந்த சந்தேகமும் இல்லை. அதிகாலை மூன்று மணியளவில், மணமகள் வீட்டிலிருந்து தப்பிச் சென்றதை அந்த நபர் கவனித்துள்ளார்.. பின்னர் தான் அந்த இளம் பெண் பரிசாகக் கொடுத்த தங்க நகைகளுடன் ஓடிவிட்டார் என்பது தெரியவந்துள்ளது.

வீட்டிலிருந்து பணத்தையும் எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார். ரயில் நிலையம் உட்பட எல்லா இடங்களிலும் தேடியும் எந்த தடயமும் கிடைக்காததால், அந்த இளைஞன் மதன்கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் அளித்தான். போலீசார் விசாரிக்கத் தொடங்கியபோது, ​​ஜிதேந்திராவும் அந்த இளம் பெண்ணுடன் காணாமல் போனது தெளிவாகியது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Read More : திருமண ஆசை காட்டி 50 பெண்களுடன் உல்லாசம்.. நைசா பேசி பணம் நகை பறிப்பு..!! கையும் களவுமாக சிக்கிய கல்யாண ராமன்..

RUPA

Next Post

Breaking : இன்று ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா? அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..

Wed Oct 1 , 2025
தங்கம் விலை இன்று ஒரே நாளில் காலை ரூ.240 மாலை ரூ.480 என மொத்தம் ரூ. 720 உயர்ந்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் […]
jewels new

You May Like