உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாகராஜ் நகரின் மௌஐமா கிராமத்தில் மஞ்சு என்பவரின் கணவர் உதய் குமார். மஞ்சுவுக்கு ஒரு தங்கை உள்ளார். உதய் குமாரின் தம்பியான உமேஷ், கடந்த 3 ஆண்டுகளாக மஞ்சுவின் தங்கையைக் காதலித்து வந்துள்ளார். இரு குடும்பத்தினரும் இவர்களின் காதலுக்குச் சம்மதம் தெரிவித்து, உமேஷ் திருமணமும் செய்து கொள்வதாக உறுதியளித்திருந்தார்.
ஆனால், 3 மாதங்களுக்கு முன்பு உமேஷ் திடீரென அந்தப் பெண்ணைத் திருமணம் செய்ய மறுத்து, வேறு ஒரு பெண்ணை விரும்புவதாக கூறியுள்ளார். இந்த ஏமாற்றத்தால் மனமுடைந்த மஞ்சுவின் தங்கை, கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலைக்கு முயன்றுள்ளார். தங்கைக்கு நேர்ந்த துயரத்தைக் கண்டு ஆத்திரமடைந்த மஞ்சு, உமேஷைப் பழிவாங்கத் திட்டமிட்டார்.
அதன்படி, அக்டோபர் 16ஆம் தேதி நள்ளிரவு சுமார் 2 மணியளவில் உமேஷ் தூங்கிக்கொண்டிருந்தபோது, மஞ்சு கூர்மையான கத்தி போன்ற கருவி ஒன்றை எடுத்துக்கொண்டு அவர் அறைக்குள் சென்றுள்ளார். தூங்கிக்கொண்டிருந்த உமேஷின் ஆணுறுப்பை அவர் வெட்டியுள்ளார். இதனால் ஏற்பட்ட வலியால் உமேஷ் அலறி எழுந்தார்.
உடனடியாகச் செயல்பட்ட குடும்பத்தினர், உமேஷை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற அறுவை சிகிச்சைக்குப் பின் உமேஷின் உயிர் காப்பாற்றப்பட்டது. அவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் மஞ்சு மீது வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More : தினமும் முட்டை சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகரிக்குமா..? பிரச்சனையே இதுதான்..!! பலருக்கும் இது தெரியாது..!!



