கல்லூரி மாணவியை நாயுடன் உடலுறவு செய்ய வைத்த கொடூரம்..!! வீடியோவை காட்டி அடுத்து நடந்த பயங்கரம்..!!

Rape 2025 2

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மலாட் பகுதியில் வசிக்கும் 19 வயது கல்லூரி மாணவி ஒருவர், மூளைச்சலவை செய்யப்பட்டு மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சித்திரவதை செய்யப்பட்டு, இறுதியாக கட்டாயப் பாலின மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


குரார் கிராமப் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த கல்லூரி மாணவி, சில மாதங்களுக்கு முன்பு குற்றம் சாட்டப்பட்ட கும்பலை சந்தித்துள்ளார். படிப்படியாக மூளைச்சலவை செய்த அக்கும்பல், மாணவியைப் பாலின மாற்றத்திற்கு உட்படுத்த அழுத்தம் கொடுத்துள்ளனர். மாணவி இதற்கு மறுப்பு தெரிவித்தபோது, அவரை மல்வானியில் உள்ள தங்கள் வீட்டிற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு, மன ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்ததோடு, ஒரு நாயுடன் உடலுறவு கொள்ளவும் கட்டாயப்படுத்தியுள்ளனர். இந்த கொடூரச் செயலை ஆபாசமாக வீடியோ பதிவு செய்த அந்த கும்பல், அதை மாணவியின் தாயாருக்கு அனுப்பி, மிரட்டி ரூ.30,000 பணம் பறித்தது. அதன் பிறகும் அவர்கள் தொடர்ந்து மாணவியை பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளனர்.

முதலில் ஆபாசப் வீடியோ மூலம் பணம் பறித்த இந்தக் கும்பல், பின்னர் மாணவியை விடுவிக்காமல், அவரை சூரத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்குப் பல மருத்துவ ஆவணங்களில் கையெழுத்திட மாணவியை கட்டாயப்படுத்தியுள்ளனர். அதன் பிறகு, மாணவிக்கு பாலின மாற்ற அறுவை சிகிச்சை செய்ய அழுத்தம் கொடுத்தனர். மாணவியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தபோது, மல்வானிக்குத் திரும்ப அழைத்து வரப்பட்ட அவர், அங்குப் பிணைக் கைதியைப் போல வைக்கப்பட்டுத் தொடர்ந்து சித்திரவதை செய்யப்பட்டுள்ளார்.

நவம்பர் 13-ஆம் தேதி, மாணவிக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பைப் பயன்படுத்தி, குற்றம் சாட்டப்பட்டவர்களின் பிடியில் இருந்து தப்பி, வீடு திரும்பினார். நடந்த முழு சம்பவத்தையும் தனது தாயிடம் கூறிய பிறகு, மலாவாணி காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த கண்டிவாலி குற்றப்பிரிவு பிரிவு நான்கு குற்றவாளிகளான பாஸ்கர் ஷெட்டி, காவேரி நிகம், நதிரா ஷேக் (எ) நவாஸ் மற்றும் மஹி கான் ஆகியோரை கைது செய்தது. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Read More : BREAKING | நாளை முதல் SIR பணிகள் புறக்கணிப்பு..!! தமிழ்நாடு முழுவதும் ஸ்டிரைக் அறிவிப்பு..!!

CHELLA

Next Post

ஆரஞ்சு பழங்கள் உடல் நலத்திற்கு நல்லது தான், ஆனால்.. இவர்கள் தவறுதலாக கூட சாப்பிடக்கூடாது!

Mon Nov 17 , 2025
ஆரஞ்சு பழங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பது நாம் அனைவரும் அறிவோம். வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்திருப்பதால், அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன, சருமத்தை பிரகாசமாக்குகின்றன, செரிமானத்தை மேம்படுத்துகின்றன. ஆனால் அனைவருக்கும் ஒரே மாதிரியான நன்மைகள் கிடைக்காது. சில உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் ஆரஞ்சு சாப்பிடும்போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் சில சூழ்நிலைகளில், ஆரஞ்சுகள் நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கும். ஆரஞ்சுகளில் அதிக […]
orange 2024 01 7ff6981aa330752d795d5fbda7998119 3x2 1

You May Like