மேற்கு வங்காளத்தின் ஜல்பைகுரி என்ற பகுதியில், மனைவியைக் கொன்று, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி, இதயம் மற்றும் பிற உறுப்புகளை ஒரு பையில் எடுத்துக்கொண்டு கிராமத்தைச் சுற்றித் திரிந்த பயங்கரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மேற்கு வங்காள மாநிலம் ஜல்பைகுரியின் மெய்னகுரி பகுதியில் நடந்த ஒரு கொடூரமான சம்பவம், மாவட்டம் முழுவதையும் உலுக்கியுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் ரமேஷ் ராய் என்ற நபர், தனது மனைவி தீபாலி ராயைக் கொன்றது மட்டுமல்லாமல், அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி, இதயம் உட்பட பல உறுப்புகளை ஒரு பையில் வைத்துக்கொண்டு கிராமத்தில் சுற்றித் திரிந்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர் பையைத் திறந்து சிலருக்கு தனது மனைவியின் இதயத்தைக் காட்டியதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு, பயந்துபோன மக்கள் உடனடியாக பஞ்சாயத்துக்குத் தகவல் தெரிவித்தனர். பஞ்சாயத்துத் தலைவர் காவல்துறைக்குத் தகவல் அளித்தார். இதன் பின்னர், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலின் மீதமுள்ள பாகங்களை மீட்டு, பின்னர் ஜல்பைகுரி அரசு கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவாகவுள்ள கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
காவல்துறையினரின் கூற்றுப்படி, ரமேஷ் ராய் காலையில் தனது மனைவியைக் கொன்று, பின்னர் கூர்மையான ஆயுதத்தால் அவரது உடலை வெட்டியுள்ளார். இதன் பிறகு, அவர் பையுடன் அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் சுற்றித் திரிந்தார். ஒரு பக்கத்து வீட்டுக்காரர், அவரே வந்து பையைத் திறந்து இதயம் மற்றும் பிற உடல் பாகங்களைக் காட்டினார் என்று கூறினார். இதன் பின்னர், கிராம மக்கள் குற்றம் சாட்டப்பட்டவரின் வீட்டை அடைந்தனர், அங்கு படுக்கை முழுவதுமாக இரத்தத்தில் நனைந்திருந்தாக தெரிவித்தனர்.
Readmore: குலதெய்வம் சாபம் விட்டால் என்ன மாதிரியான பிரச்சனைகள் வரும்..? இதை நீக்க என்ன பரிகாரம் செய்யலாம்..?