ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணி பெண்ணை தள்ளிவிட்ட நபர் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் திருப்பத்தூர் அருகே, ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணியை பாலியல் தொல்லை செய்து, அவரை கீழே தள்ளிவிட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் அந்த பெண்ணின் கரு கலைந்துடன், காலும் உடைந்தது.. இந்த கொடூர செயலிலில் ஈடுபட்ட ஹேமராஜ் என்ற நபர் கைது செய்யப்பட்டார்..
இந்த நிலையில் ஓடும் ரயிலில் இருந்து பெண்ணை தள்ளிவிட்ட ஹேமராஜ் குற்றவாளி என்று திருப்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவருக்கான தண்டனை விவரங்கள் திங்கள் கிழமை அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..