வலி மற்றும் காய்ச்சலுக்குப் பயன்படுத்தப்படும் நிமெசுலைடு மருந்துகள் தொடர்பாக மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. 100 மில்லிகிராமிற்கு மேல் உள்ள நிமெசுலைடு உடனடி வெளியீட்டு மாத்திரைகள் மற்றும் சிரப்களின் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகத்தை அது முழுமையாகத் தடை செய்துள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MoHFW), மனிதர்களின் உடல்நலத்திற்கு ஆபத்து ஏற்படுத்ததும் என்று எச்சரித்துள்ளது. இந்த அறிவிப்பு டிசம்பர் 29 அன்று வெளியிடப்பட்டு, உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
நிமெசுலைடு என்பது வலி, அழற்சி மற்றும் காய்ச்சலைக் குறைக்கும் ஒரு பொதுவாகப் பயன்படுத்தப்படும் மாத்திரை ஆகும். இந்தியாவில் இது Nise, Nimulid, Nicip போன்ற பிரபலமான வர்த்தகப் பெயர்களில் விற்பனை செய்யப்படுகிறது.
என்னென்ன மருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளன?
அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, 100 மி.கி-ஐ மீறும் அளவில் உள்ள நிமெசுலைடு வாய்வழி மருந்துகள் மட்டும் தடை செய்யப்பட்டுள்ளது.. எனினும் இது முழுமையான தடை அல்ல.. 100 மி.கி அல்லது அதற்குக் குறைவான அளவில் உள்ள மருந்துகள் மற்றும் பிற அனுமதிக்கப்பட்ட வடிவங்களுக்கு இந்தத் தடை பொருந்தாது.
ஏன் தடை விதிக்கப்பட்டது?
சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் “100 மி.கி-க்கு மேல் உள்ள நைம்சூலைடு மருந்துகள் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்; அதற்கு மாற்றாக பாதுகாப்பான மருந்துகள் உள்ளன” என தெரிவித்துள்ளது.
இந்த முடிவு மருந்து ஆலோசனை வாரியத்தின் பரிந்துரையின் அடிப்படையில், எடுக்கப்பட்டுள்ளது. கல்லீரல் பாதிப்பு (Hepatotoxicity). அதிக அளவில் எடுத்தால் நைம்சூலைடு கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று ஏற்கனவே மருத்துவ உலகம் எச்சரித்துள்ளது.
இதற்கு முன் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்
12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு நிமெசுலைடு பயன்பாடு ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது.
2025 பிப்ரவரியில், மிருகங்களுக்கு நிமெசுலைடு பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டது.
தற்போது, பெரியவர்களுக்கான அதிக அளவு மாத்திரைகளுக்கும் இந்த கட்டுப்பாடு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
நிமெசுலைடு தயாரிக்கும் முக்கிய நிறுவனங்கள்:
டாக்டர் ரெட்டீஸ் (Dr Reddy’s)
சிப்லா (Cipla)
சன் ஃபார்மா (Sun Pharma)
அபாட் இந்தியா (Abbott India)
ஆல்கெம், டோரண்ட், லூபின், இன்டாஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள்
இந்நிறுவனங்கள் தற்போது 100 மி.கி-க்கு மேற்பட்ட மருந்துகளை சந்தையிலிருந்து திரும்பப் பெறவோ அல்லது புதிய அளவுகளில் மீளமைக்கவோ வேண்டிய நிலை ஏற்படும்.
நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்?
திடீரென மருந்தை நிறுத்த வேண்டாம் என்றும், 100 மி.கி-க்கு மேற்பட்ட நைம்சூலைடு மருந்துகளை எடுத்துக்கொண்டு இருப்பவர்கள், உடனே மருத்துவரை அணுக வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தி உள்ள2து.. மருத்துவர் பாதுகாப்பான மாற்று மருந்துகளை பரிந்துரைப்பார்.
இந்த முடிவு, பொதுவாக அதிகம் பயன்படுத்தப்படும் மருந்துகளின் பாதுகாப்பு–ஆபத்து மதிப்பீடு மீது அரசு அதிக கவனம் செலுத்தி வருவதை காட்டுகிறது. உயர் அளவு நிமெசுலைடு மருந்துகளைத் தடை செய்வதன் மூலம், கல்லீரல் பாதிப்பு போன்ற கடுமையான பக்கவிளைவுகளைத் தவிர்க்கும் நோக்கில் அரசு செயல்படுகிறது.
இனி நோயாளிகளும் மருத்துவர்களும் பாதுகாப்பான மாற்று மருந்துகளுக்கு மாறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : உங்கள் இதயத்தை பாதுகாப்பாக வைத்திருக்க, புத்தாண்டு முதல் இந்த 5 டிப்ஸை பாலோ பண்ணுங்க..!



