தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் புதிதாக களம் காணும் தவெகவும் தேர்தலுக்கு தயாராகி வருகிறது.. அந்த வகையில் தவெக சார்பில் போட்டியிடும் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.. அதன்படி பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.. மேலும் இன்று பெரம்பூரில் விஜய் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்..
பெரம்பூரில் இருந்து தனது பிரச்சாரத்தையும் விஜய் தொடங்கினார்.. பெரம்பூரில் திமுக அரசை குற்றம்சாட்டிய விஜய் தவெகவுக்கு இந்த தேர்தலில் ஒரே ஒரு முறை வாய்ப்பளிக்க வேண்டும் என்று கூறினார்.. இதை தொடர்ந்து கொளத்தூரில் பிரச்சாரம் செய்ய விஜய் திட்டமிட்டிருந்தார்..
ஆனால் கொளத்தூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் போலீஸ் அனுமதித்த இடத்திற்கு 100 மீட்டர் முன்பே வாக்கு சேகரித்தார்.. மேலும் அளவுக்கு அதிகமான கூட்டம் கூடியதால் போலீசார் கூறியதை அடுத்து 2 நிமிடங்களில் பேச்சை முடித்துக் கொண்டார் விஜய்.
இந்த நிலையில் சென்னை வில்லிவாக்கத்தில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது.. கொளத்தூரில் சரியான பாதுகாப்பு கொடுக்காததால் வில்லிவாக்கத்தில் விஜய் பிரச்சாரம் ரத்து செய்யப்படுவதாக தவெக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். வில்லிவாக்கத்தில் தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள இருந்த விஜய்யின் பிரச்சாரம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. இன்று அறிவிக்கப்பட்ட 4 இடங்களில் 2 இடங்களில் விஜய் பிரச்சாரம் செய்யவில்லை. முதல் நாளிலேயே விஜய் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
இந்த நிலையில் விஜய்யின் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது குறித்து அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை குழு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்தார்.. இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ எங்கள் பரப்புரையை தடுக்க முதல்வர் சதி செய்கிறார். அவரின் பேச்சை கேட்டு போலீஸ் பாதுகாப்பு வழங்கவில்லை..மற்ற தொகுதிகளில் தேர்தல் அதிகாரி பேச்சை போலீசார் கேட்கின்றனர்.. ஆனால் கொளத்தூர் தொகுதியில் கேட்கவில்லை.. தவெக தலைவர் விஜய்யின் கொளத்தூர் பரப்புரைக்கு காவல்துறை பாதுகாப்பு இல்லை.. விஜய்க்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை. எங்கள் பரப்புரையை முடக்குவதே திமுகவின் திட்டம்.. இன்னும் 2 முறை விஜய் கொளத்தூரில் பரப்புரை மேற்கொண்டால் முதல்வர் தோல்வி அடைவார்.” என்று தெரிவித்தார்..
Read More : விஜய்யின் சொத்து மதிப்பு எவ்வளவு..? தாய், தந்தைக்கு கடன் வழங்கியதாக வேட்பு மனுவில் தகவல்..!



