தமிழ்நாடு அரசு திட்டங்கள் குறித்த விளம்பரங்களில் முதல்வரின் பெயர் இடம் பெறக்கூடாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது..
உங்களுடன் ஸ்டாலின் திட்ட விளம்பரத்தில். முன்னாள் முதல்வர் கருணாநிதி புகைப்படத்தை பயன்படுத்தக் கூடாது என்றும், உங்களுடன் ஸ்டாலின் பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று அதிமுக எம்.பி. சி.வி சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.. இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது..
அதன்படி, உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அரசு திட்டங்களில், முதல்வர் புகைப்படத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.. ஆனால் கட்சியின் கொள்கை தலைவர்களின் புகைப்படத்தையோ, முன்னாள் முதல்வர்களின் புகைப்படத்தை பயன்படுத்துவது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது.. மேலும் அரசு திட்டத்தின் பெயரில். அரசியல் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது..
ஆளும் கட்சியின் பெயர், சின்னத்தை அரசு திட்டத்தில் பயன்படுத்துவது உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் உத்தரவுக்கு விரோதமானது.. எனவே தமிழக அரசு புதிதாக தொடங்க உள்ள திட்டங்களில் தமிழக அரசு திட்டங்களின் விளம்பரங்களில் முதல்வர் பெயரையோ, முன்னாள் முதல்வரின் புகைப்படத்தையோ பயன்படுத்தக் கூடாது.. அதே நேரத்தில், அரசு நலத்திட்டங்கள் தொடங்குவது அல்லது செயல்படுத்துவது குறித்து நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி அதிமுக அளித்த புகாரை தேர்தல் ஆணையம் விசாரிக்க இந்த வழக்கு தடையாக இருக்காது என்று தெரிவித்த நீதிபதி வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்..
Read More : Breaking : அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு.. இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய நீதிமன்றம்.. அடுத்தது என்ன?