ரூ.60,000 சம்பளத்தில் மத்திய அரசில் வேலை.. ஜாக்பாட் அறிவிப்பு.. உடனே விண்ணப்பிங்க..!

job

மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்திய போட்டி ஆணையம் (Competition Commission of India – CCI) இளம் தொழில் வல்லுநர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 14 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பணியிடங்கள் சட்டம், பொருளாதாரம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் (IT) ஆகிய துறைகளில் உள்ளன.


பணியிட விவரம்:

  • சட்டம் – 9
  • பொருளாதாரம் – 1
  • தகவல் தொழில் நுட்பம் – 4

வயது வரம்பு: விண்ணப்பிக்கும் நபர்கள் அதிகபடியாக 30 வயது வரை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

சட்டப்பிரிவு (Law): இளங்கலை சட்டம் (LL.B) அல்லது அதற்குச் சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும். இந்திய பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்திருக்க வேண்டும். ஒழுங்குமுறை சட்டங்கள், போட்டி சட்டம், சர்வதேச வணிகம், கார்ப்பரேட் சட்டம், நிதி சட்டம் போன்ற துறைகளில் சிறப்பு பெற்றவர்களுக்கு முன்னுரிமை. சட்டப்பணியில் அனுபவம் இருந்தால் சிறப்பு.

பொருளாதாரப் பிரிவு (Economics): பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். முனைவர் பட்டம் (Ph.D) பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தகவல் தொழில்நுட்பப் பிரிவு (IT): கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கணினி பொறியியல், எலக்ட்ரிக்கல் மற்றும் கம்யூனிகேஷன் போன்ற துறைகளில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். முதுகலைப் பட்டம் இருந்தால் சிறப்பு. கூடுதலாக Linux/CCNA/CISSP/CISA/CISM/CEH போன்ற சான்றிதழ் படிப்பை முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

அனுபவம்: அனைத்து பிரிவுகளுக்கும் குறைந்தது 3 ஆண்டுகள் அனுபவம் எதிர்பார்க்கப்படுகிறது.

சம்பளம்: தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.60,000 சம்பளம் வழங்கப்படும். மேலும் ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீதம் ஏற்றப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது? விண்ணப்பிக்க விரும்புவோர் https://cci.gov.in/career என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தற்போது விண்ணப்பம் பெறப்பட்டு வரும் நிலையில், டிசம்பர் 1-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

Read more: Flash : மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய தங்கம் விலை.. இன்றைய ரேட் என்ன?

English Summary

The Competition Commission of India (CCI) has issued a notification for the recruitment of young professionals on contract basis.

Next Post

உலகிலேயே எந்த நாட்டில் பெட்ரோல் விலை மிக மிக குறைவு தெரியுமா..? ரூ.1.78-க்கு விற்கும் நாடு எது..? டாப் 10 லிஸ்ட் இதோ..!!

Thu Nov 6 , 2025
எந்தவொரு நாட்டின் போக்குவரத்திற்கும் மற்றும் பொருளாதாரத்தின் சுழற்சிக்கும் மிக இன்றியமையாத சக்தியாக எரிபொருள் (பெட்ரோல் மற்றும் டீசல்) விளங்குகிறது. இதன் விலையில் ஏற்படும் சிறு மாற்றம் கூட ஒரு நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில், உலகிலேயே மிகக் குறைந்த விலையில் பெட்ரோல் விற்பனை செய்யும் நாடுகள் குறித்த தரவுகளை இப்போது பார்க்கலாம். இந்த நாடுகள் பெரும்பாலும் உலகின் மிகப்பெரிய எண்ணெய் வளங்களைக் கொண்டிருப்பதாலோ அல்லது தங்கள் […]
Petrol 2025

You May Like