தென் கொரியாவில் நடப்பது உலகிலேயே மிகவும் அபூர்வமான ஒரு முயற்சி. டேட்டிங் சென்றால்.. அரசு பணம் தரும். திருமணம் செய்தால் லட்சக்கணக்கில் உதவி. குழந்தை பெற்றால் – அதற்கும் தனி நிதி. இது ஒரு கற்பனை கதை இல்லை; நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டதால் அரசு மேற்கொள்ளும் அவசர நடவடிக்கை.
வேலை வாழ்க்கை முன்னேற்றம் – குடும்ப வாழ்க்கை பின்னடைவு
தென் கொரியா இன்று பொருளாதாரத்தில் மிக முன்னேறிய நாடு. ஆனால் அதே நேரத்தில் அங்குள்ள மக்கள், காலை முதல் இரவு வரை அலுவலகத்தில் நீண்ட வேலை நேரம் காரணமாக மன அழுத்தம், தனிமை என உறவுகளுக்கு நேரமில்லாத வாழ்க்கை முறை வாழ்கின்றனர்.. இந்த வாழ்க்கை முறையால். காதல் வாழ்க்கை குறைந்து வருகிறது.. திருமணத்தை பலரும் தள்ளி வைக்கிறார்கள்.. குழந்தை பெறும் எண்ணமே பலருக்கு இல்லை..
இதன் விளைவாக, தென் கொரியாவின் பிறப்பு விகிதம் உலகிலேயே மிகவும் குறைந்த நிலைக்கு வீழ்ந்துள்ளது. இது நாட்டின் எதிர்காலத்திற்கு மிகப் பெரிய ஆபத்தாக பார்க்கப்படுகிறது.
இந்த நெருக்கடியை சமாளிக்க அரசு எடுத்திருக்கும் முடிவு வியக்கத்தக்கது. காதலுக்கு அரசு உதவி செய்கிறது.. ஒரு ஆண் – பெண் டேட்டுக்கு சென்றால்.. அரசு சுமார் 350 (சுமார் ₹31,000) வழங்குகிறது.. அந்த பணத்தை உணவகம் செல்ல, சினிமா பார்க்க, ஒன்றாக வெளியில் செல்ல பயன்படுத்தலாம்.
இருவரின் பெற்றோர்கள் சந்தித்தால், அதற்கான செலவும் அரசு ஏற்கிறது. இந்த டேட் திருமணமாக மாறினால், அரசு ரூ. 25 லட்சம் வரை நிதி உதவி வழங்குகிறது. குழந்தை பெற்றால் கூடுதல் நிதி கிடைக்கும்.. குழந்தை பிறந்தவுடன், அந்த குழந்தையை வளர்க்கவும், கல்வி, பராமரிப்பு செலவுகளுக்கும் அரசு தொடர்ந்து உதவுகிறது. அதாவது, காதல், திருமணம், குழந்தை இந்த மூன்றுக்கும் அரசே பணம் போட தயாராக இருக்கிறது.
ஏன் இவ்வளவு தீவிரம்?
தென் கொரியாவில் வீட்டு வாடகை, கல்வி செலவு, வாழ்க்கைச் செலவுகள் அனைத்தும் கடுமையாக உயர்ந்துள்ளன. இதனால் பல இளம் தம்பதிகள், “திருமணம் செய்தால் செலவு சமாளிக்க முடியாது, “குழந்தை வேண்டாம், வாழ்க்கை கடினம்”
என்று முடிவு செய்து விடுகிறார்கள். அதனால் அரசு இப்போது “பணம் கொடுத்து உறவுகளை உருவாக்க வேண்டும்” என்ற நிலைக்கு வந்துள்ளது.
இது ஒரு வித்தியாசமான திட்டமாகத் தோன்றினாலும், தென் கொரியாவிற்கு இது வாழ்வா – அழிவா என்ற அளவிலான பிரச்சனை. இளம் தலைமுறை இல்லாமல் போனால், வேலை சக்தி குறையும், பொருளாதாரம் சிதறும், முதியோர் அதிகரிப்பார்கள்.. எனவே, “உறவுகள் உருவாக்குங்கள் – நாட்டை காப்பாற்றுங்கள்”
என்பதே இப்போது தென் கொரிய அரசின் மறைமுக அழைப்பாக உள்ளது..
Read More : கடலை எதிர்த்துப் போரிடும் ஆறு..!! பின்னோக்கி பாயும் அதிசயம்..!! உலகையே மிரளவைக்கும் இயற்கை..!!



