கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தில் முன்னாள் பள்ளி ஆசிரியை ஒருவர் தனது கணவரை திட்டமிட்டு கொலை செய்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 9 ஆண்டுகளுக்குப் பின் கொலை செய்த மனைவிக்கும், அவரது கள்ளக்காதலனுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இம்தியாஸ் என்பவர் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அதேசமயம், கலபுரகியில் பணியாற்றும் போது லட்சுமி என்ற ஆசிரியையை காதலித்து வந்தார். பின்னர், பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணமும் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். பின்னர், பின் பணி இடமாற்றத்தால் இருவரும் வேறு இடங்களில் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில், லட்சுமி தனது பழைய தோழராக இருந்த கிருஷ்ணமூர்த்தி என்பவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில், இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். லட்சுமியின் வீட்டிற்கே வந்து உல்லாசமாக இருந்ததால், இருவரையும் லட்சுமியின் மகன் பார்த்து தனது தந்தையிடம் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, லட்சுமியை கணவன் பலமுறை எச்சரித்தும் கள்ளத்தொடர்பை கைவிட மறுத்துள்ளார். இதனால், கடந்த 2016ஆம் ஆண்டு ரம்ஜானை முன்னிட்டு வீட்டிற்கு வந்த இம்தியாஸ், தனது மனைவியும் காதலனும் ஒன்றாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவனை தீர்த்துக் கட்ட லட்சுமி திட்டமிட்டுள்ளார். இதனால், சம்பவத்தன்று காதலன் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது நண்பர் சிவராஜ் ஆகியோரை வீட்டிற்கு வரவழைத்து கணவரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்தார். பின்னர், உடலை ஆட்டோவில் கொண்டு சென்று கால்வாயில் தூக்கி வீசியுள்ளனர்.
இதுதொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் 9 ஆண்டுகளாக நீடித்து வந்தது. இந்த வழக்கில் கணவனை திட்டமிட்டு கொலை செய்த லட்சுமிக்கும், கிருஷ்ணமூர்த்திக்கும் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், சாட்சியை அழிக்க உதவிய சிவராஜுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More : இந்த உணவுகளை சாப்பிட்டால் நிச்சயம் சிறுநீரக கற்கள் வரும்..!! மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை..!!