நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியில் இசக்கிமுத்து என்பவர் வசித்து வருகிறார்.. கூலித் தொழிலாளியான இவருக்கு 14 வயதில் மகள் இருக்கிறார். அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து இசக்கி முத்து தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.. இவர் தொடர்ந்து தனது மகளிடம் அத்துமீறி வந்ததாக கூறப்படுகிறது.. ஒருகட்டத்தில் சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவரை அரசு மருத்துவமனைக்கு இசக்கி முத்து அழைத்து சென்றுள்ளார்.
மருத்துவ சோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.. இதையடுத்து அரசு மருத்துவமனை மருத்துவர்கள் நாங்குநேரி அரசு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.. இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.. பெற்ற தந்தையே தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.. தொடர்ந்து இசக்கி முத்து மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர்..
இந்த வழக்கு நெல்லை சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.. இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.. இந்த கொடூர செயலில் ஈடுபட்ட தந்தைக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கும் அரசுக்கு போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..



