ஓடும் சொகுசு காரில் 11ஆம் வகுப்பு மாணவியை சீரழித்த செய்த கொடூரன்கள்..!! வீடியோவை காட்டி அடிக்கடி..!! பணமும் ரூ.40,000 போச்சு..!!

rape case 1767363452 1

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் 11-ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியை திட்டமிட்டு மிரட்டி, 4 வெவ்வேறு வாகனங்களில் வைத்துப் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில், முக்கியக் குற்றவாளிகள் இருவரைப் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.


இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான அவ்சாஃப் அலி கான் மற்றும் அவனது கூட்டாளியான ஜிம் உரிமையாளர் மஜ் கான் ஆகியோரே இந்த கொடூரத்தை செய்தவர்கள். முதலில் அந்த மாணவியை தார் (Thar) உள்ளிட்ட 4 சொகுசு கார்களில் வைத்துப் பலமுறை சீரழித்துள்ளனர். இதனை தனது செல்போனில் வீடியோ எடுத்த மஜ் கான், அந்த ரகசிய வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி மாணவியிடமிருந்து சுமார் ரூ.40,000 பணம் பறித்துள்ளார். அந்த வீடியோவை வைத்தே பலமுறை பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரியவந்தது.

இந்த விவகாரம் குறித்து புகார் வந்தவுடன், உதவிப் போலீஸ் கமிஷனர் (ACP) அங்கிதா கத்ரகர் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணை குழு அதிரடியில் இறங்கியது. குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட தார் கார் உள்ளிட்ட 4 சொகுசு வாகனங்களைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தகவல்களை ரகசியமாக கசியவிட்டதாக கோஹேஃபிசா காவல் நிலையத்தை சேர்ந்த தலைமைக் காவலர் ஒருவர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

குற்றவாளிகள் பயன்படுத்திய ஐபோனை (iPhone) மீட்கப் போலீசார் தற்போது தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அந்த செல்போன் கிடைத்தால், இந்த வழக்கில் இன்னும் பல ரகசியங்கள் மற்றும் வீடியோக்கள் சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளி செல்லும் ஒரு சிறுமிக்கு சக மனிதர்களால் நேர்ந்த இந்த அவலம், போபால் நகரில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

Read More : பெண்களே..!! ரூ.5,000 உரிமைத்தொகை இன்னும் வரவில்லையா..? உடனே இதை பண்ணுங்க..!! வெளியான அறிவிப்பு..!!

CHELLA

Next Post

விஜய் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க மாட்டார்.. அவர் ஒரு ஆளே கிடையாது.. நயினார் காட்டம்..!

Fri Feb 13 , 2026
தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.. ஒருவரையொருவர் சரமாரியாக விமர்சித்தும் வருகின்றனர்.. கொள்கை எதிரி என்று பாஜகவை அறிவித்துள்ள தவெக தலைவர் விஜய் அவ்வப்போது பாஜகவை விமர்சித்து வருகிறார்.. ஆனால் திமுகவை அட்டாக் செய்யும் அளவுக்கு விஜய் பாஜகவை கடுமையாக விமர்சிப்பதில்லை.. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார்.. இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் […]
nainar vijay

You May Like