தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்கும் தீர்மானத்திற்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..
சென்னை மாநகராட்சியில் தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்க உத்தரவிடப்பட்டது. இதனை எதிர்த்தும், பணி நிரந்தரம் கோரியும் தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.. இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் இரவோடு இரவாக தூய்மை பணியாளர்களையும் அவருக்கு ஆதரவாக போராடியவர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளு
இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் தாக்கல் மனு தாக்கல் செய்யப்பட்டது..
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சென்னை மாநாகராட்சியில் 2 மண்டலங்களில் தூய்மப் பணிகளை தனியாருக்கு வழங்கும் தீர்மானத்திற்கு தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டுள்ளது.. தூய்மை பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர் என்ற நிலை எழவில்லை என்றும் நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது. தூய்மை பணியாளர்களின் ஊதியம் தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு தனியார் நிறுவனத்துடனும் பேச வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.. அரசு, மாநகராட்சி இணைந்து பேசி தூய்மை பணியாளர்கள் கடைசியாக பெற்ற ஊதியத்தை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இந்த வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது..