நாகை, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவரி டெல்டா மாவட்டங்களில் பெய்த தொடர் கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நெல் வயில்கள் நீரில் மூழ்கி உள்ளன.. மேலும் டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு மாதமாக குறுவை அறுவடைப் பணிகள் நடந்து வருகின்றன.. ஆனால் அறுவை செய்யப்பட்ட நெல், கொள்முதல் செய்யப்படாததால் நெல் மணிகள் முளைக்கத் தொடங்கிவிட்டன.. மேலும் வயலில் அறுவை செய்ய வேண்டிய நெல்மணிகளும் முளைக்கத் தொடங்கி விட்டதால் விவசாயிகள் கவலை உள்ளனர்.. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்..
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “ தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக குறுவை நெல் சாகுபடியில் அறுவடை செய்த சுமார் 8,000 மெட்ரிக் டன்னுக்கு அதிகமான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் மன வேதனையளிக்கிறது. அறுவடை செய்து 10 நாட்கள் கழிந்தும் நெல்மூட்டைகளைக் கொள்முதல் செய்யாமல் விவசாயிகளின் பல மாத உழைப்பை உதாசீனப்படுத்தியுள்ள திமுக அரசின் ஆணவம் கடும் கண்டனத்திற்குரியது.
விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில் திமுக அரசு நெல் கொள்முதலைத் துரிதப்படுத்த வேண்டும் என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனாலும், அலட்சியப்போக்குடன் செயல்பட்டு, நெல்மூட்டைகளை சேதப்படுத்தியது மட்டுமன்றி அறுவடைக்குத் தயாராக இருந்த 1,00,000-ற்கும் அதிகமான ஏக்கர் நெற்பயிர்களையும் தண்ணீரில் மிதக்கவிட்டு விவசாயப் பெருமக்களைக் கண்ணீரில் மூழ்கடித்துள்ளது திமுக அரசு.
எனவே, “நானும் டெல்டாக்காரன் தான்” என விளம்பர வசனம் பேசும் முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்கள், அறுவடை செய்யப்பட்ட நெல்லைப் போர்க்கால அடிப்படையில் உடனடியாகக் கொள்முதல் செய்திடவும், பாதிப்புக்குள்ளான நெற்பயிர்களுக்கு ஏக்கர் ரூ.50,000 வீதம் நிவாரணம் வழங்கிடவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்..
Read More : FLASH | சென்னையில் அடுத்த பயங்கரம்..!! 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!! பெரும் பரபரப்பு..!!



