தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.. அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.. அந்த வகையில் மக்களை காப்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் இன்று வேலூரில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்..
அப்போது பேசிய அவர் “ திமுக ஆட்சியில் ஏழை மக்களுக்கான திட்டங்கள் எதையும் நிறைவேற்றவில்லை.. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களையும் திமுக அரசு கிடப்பில் போட்டது.. விவசாயிகளின் நலனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது அதிமுக ஆட்சியில் தான்.. விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது.. குடி மராமத்து திட்டங்களை கொண்டு, ஆறுகள் குளங்கள், ஏரிகள் தூர்வார்ப்பட்டது.. ஏரிகளில் இருந்த வண்டல் மண் அகற்றப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது..
விவசாய பயிர் காப்பீட்டு திட்டம் மூலம், வறட்சி, புயல், வெள்ளம், என எந்த பேரிடர் ஏற்பட்டாலும் விவசாயிகளுக்கு சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுத்தது அதிமுக அரசு தான்.. 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக உயர்த்துவோம் என வாக்குறுதி அளித்த திமுக அதனை நிறைவேற்றவில்லை.. ஆனால் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஏழை மக்களுக்கான நிவாரண தொகையை பெற்று தரக்கூடிய கட்சி அதிமுக தான்.. அதே போல், 7.5% இட ஒதுக்கீட்டால் 2818 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்வி பெற்றுள்ளனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசே மருத்துவக் கல்வி கட்டணத்தை செலுத்தியது..
அதிமுக ஆட்சி அமைந்த உடன் பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும்.. அதிமுக ஆட்சி அமைந்த உடன், ஒவ்வொரு தீபாவளிக்கு பெண்களுக்கு சேலை வழங்கப்படும்.. பொங்கல் பண்டிகைக்கு முன்பே, அனைத்து குடும்ப அட்டைக்கும் வேட்டி சேலை வழங்கப்படும்.. ஏழைகளுக்கு பிரமாதமான வீடு கட்டித்தரப்படும்..” என்று தெரிவித்தார்..
Read More : அடுத்த ஆண்டு கமலாலயம் இல்ல.. சென்னை கோட்டை தான் நம்ம டார்கெட்..!! – நயினார் நாகேந்திரன் பேட்டி..