“ திமுக அரசு இனியாவது முருக பக்தர்கள் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்க வேண்டும்..” அண்ணாமலை வலியுறுத்தல்..!

annamalai 1

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பான விவகாரத்தில் தனிநீதிபதி உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவை இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது.. தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலை மேல் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற, மாண்புமிகு நீதியரசர் திரு. ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களின் தீர்ப்புக்கு எதிரான திமுக அரசின் மேல்முறையீட்டையும், அது தொடர்பான பிற மனுக்களையும், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது பெருமகிழ்ச்சியளிக்கிறது.


ஆண்டில் ஒரே ஒரு நாள், கோவில் பிரதிநிதிகளும், முருக பக்தர்களும் தீபத்தூணில் தீபம் ஏற்றினால், சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்ற திமுக அரசின் வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அப்படி ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால், அது தமிழக திமுக அரசு திட்டமிட்டு உருவாக்கினால் மட்டுமே நடக்கும் எனவும், கடுமையாக விமர்சித்துள்ளது.

மேலும், திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தீபத் தூண், கோவிலுக்கே சொந்தமானது என்பதை, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. சட்டம் ஒழுங்கு என்ற போர்வையில், சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் திமுக அரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தன்னிச்சையான போக்கு, மிக ஆபத்தானது என்றும், அரசியல் லாபத்திற்காக திமுக அரசு, இத்தனை தூரம் தரம் தாழ்ந்து செல்லக் கூடாது என்றும், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் திமுக அரசை எச்சரித்துள்ளது.

திமுக அரசு இனியாவது தனது அதிகார துஷ்பிரயோகத்தை நிறுத்திக்கொண்டு, மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினை மதித்து, முருக பக்தர்கள் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

Read More : Flash : திருப்பரங்குன்றம் தீப விவகாரம்.. மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி.. தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்த நீதிமன்றம்..!

RUPA

Next Post

ஹனிட்ராப் மூலம் இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு பகிர்ந்த நபர் கைது..! பகீர் தகவல்கள்..!

Tue Jan 6 , 2026
ஹரியானா மாநிலம் அம்பாலாவில், சமூக வலைதளங்கள் மூலம் “ஹனிட்ராப்” செய்து ஏமாற்றி, இந்திய இராணுவம் மற்றும் விமானப்படை தொடர்பான ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியதாக குற்றச்சாட்டின் பேரில் 31 வயது இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் சஹா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சப்கா கிராமத்தைச் சேர்ந்த சுனில் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரை அம்பாலா கண்டோன்மென்ட் பேருந்து நிலையம் அருகே போலீஸார் பிடித்தனர். சமூக வலைதளங்களில் […]
ambala honey trap case

You May Like