திமுகவை தீய சக்தி என்ற விமர்சனத்திற்கு திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் பதிலடி கொடுத்துள்ளார்..
தவெக தலைவர் விஜய் இன்று ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.. திமுகவை கடுமையாக விமர்சித்த அவர் “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதா மேடமும் ஒரே வார்த்தையில் திமுகவை காலி செய்தனர்.. ஏன் இவ்வளவு கடுமையாக விமர்சிக்கிறார்கள் என்று யோசிப்பேன்.. அவர்கள் சொன்னதையே நானும் சொல்கிறேன்..
திமுக ஒரு தீய சக்தி என பல முறை ஆக்ரோஷமாக முழங்கினார் விஜய்.. திமுக தீய சக்தி என ஜெயலலிதா கூறியது சரிதான்.. தொடர்ந்து பேசிய அவர் தவெக ஒரு தூய சக்தி.. தீய சக்தியான திமுகவுக்கும் தூய சக்திக்கும் தான் போட்டியே.. நம்பிக்கை உடன் இருங்க.. வெற்றி நிச்சயம்..” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் திமுகவை தீய சக்தி என்ற விமர்சனத்திற்கு திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் பதிலடி கொடுத்துள்ளார்.. இதுகுறித்து பேசிய அவர் “ கரூர் துயரம் மூலம் தவெக கொலைகார சக்தி என தெரிகிறது.. தவெக தூய சக்தியா என்பதை மக்கள் தான் சொல்ல வேண்டும்.. கரூருக்கு விஜய் ஏன் தாமதமாக வந்தார் என்பதற்கு இதுவரை பதில் கூறவில்லை..
மக்களுக்காக பணியாற்றும் ஒரு கட்சி திமுக.. மக்களை வாழவைக்கும் கட்சி திமுகம்.. சாகடிக்கும் கட்சி தவெக.. திமுக அரசு விவசாயிகளின் நன்மைக்கான அரசாக திமுக அரசாக உள்ளது.. ஆட்சிக்கும் கட்சிக்கும் என்ன வேறுபாடு என்பதை விஜய் புரிந்துகொள்ள வேண்டும்.. இந்தியாவில் முதன்முதலில் விவசாயிகளுக்காக இலவச மின்சாரம் வழங்கிய ஆட்சி திமுக ஆட்சி..” என்று தெரிவித்தார்..



