ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்தார்.. அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் “ எடப்பாடியார் தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்.. எடப்பாடியார் உறுதியாக வெற்றி பெறுவார்.. அவர் தான் 2026-ல் முதலமைச்சர். மின்மினி பூச்சிகள் எல்லாம் வெளிச்சம் தராது. மக்கள் தான் எஜமானர்கள்.. இது சினிமா வசனம் இல்லை.. அமிதாப் பச்சன் வந்தாலும் கூட்டம் கூடும்.. யார் ஆட்சி அமைப்பார்கள் என்பதை மக்கள் தான் தீர்மானிப்பார்கள்.
மதுரையில் ரூ.200 கோடி மக்களின் வரிப்பண திமுக நிர்வாகியால் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கிறது.. அதற்கு தீர்வே கிடைக்கவில்லை.. ஒரு மேயர் இல்லாமல் மாநகராட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.. 3 மாதங்களாக மாநகராட்சி கூட்டங்கள் நடைபெறெவில்லை.. இதனால் மக்களின் குறை நிறைகள் குறித்து பேச முடியவி.
இதுபோல் ஒரு அவல ஆட்சி இந்தியாவில் மட்டும் அல்ல.. வேறு எங்கும் நடந்தது இல்லை.. 5 மண்டல தலைவர்கள் இல்லை.. நிலைக்குழு தலைவர்கள் இல்லை.. எனவே திமுக ஆட்சி 23-ம் புலிகேசி ஆட்சியை போல தான் இருக்கிறது.. போதைப் பொருட்களால் குழந்தைகள் முதல் பாட்டிகள் வரை பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாத சூழல் இருக்கிறது.. முன்பு எல்லாம் பொதைப் பொருளை விற்பார்கள். ஆனால் இப்போது எல்லாமே ஆன்லைன் மூலமே விற்க தொடங்கி விட்டார்கள்.. கஞ்சா விற்பனை செய்பவர்கள் கூட டோர் டெலிவரி செய்ய தொடங்கிவிட்டனர்.. கஞ்சாவிலும் டெக்னாலஜி வளர்ந்துவிட்டது..” என்று தெரிவித்தார்..
Read More : ரேஷன் அட்டை தாரர்களுக்கு குட்நியூஸ்..! பொங்கல் பரிசு ரூ.5000? விரைவில் தமிழக அரசு கொடுக்கப்போகும் சர்பிரைஸ்!



