நெருங்கும் தேர்தல்..! திமுகவின் பிரத்யேக செயலி அறிமுகம்..! பரபரக்கும் அரசியல் களம்..!

dmk app election manifesto

2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஏற்கனவே பல யூகங்களை வகுத்து வருகின்றன.. 2026 சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது..


திமுக தங்கள் வலுவான கூட்டணி உடன் ஆட்சியை தக்க வைக்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.. எப்படியாவது இந்த முறை ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று அதிமுக கூட்டணி தீவிரம் காட்டி வருகிறது.. நாம் தமிழர் தனியாக தேர்தலை எதிர்கொள்ள உள்ளது.. தவெக தலைமையில் ஓபிஎஸ், டிடிவி ஆகியோர் இணைந்து கூட்டணி உருவாகும் என்று கூறப்படுகிறது.. பாமக, தேமுக இன்னும் தங்கள் கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை..

ஆளுங்கட்சியான திமுக ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது.. என் வாக்குச்சாவடி, வெற்றிவாக்குச்சாவடி போன்ற முன்னெடுப்புகளை அக்கட்சி தொடங்கி உள்ளது.

இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் அறிக்கையை தயாரிக்க கனிமொழி தலைமையிலான குழுவை திமுக அமைத்துள்ளது.. துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் 12 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை குழு அறிவிக்கப்பட்டுள்ளது.. டி.கே.எஸ் இளங்கோவன், கோவி. செழியன், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி ராஜா, அப்துல்லா, கான்ஸ்டண்டைன் ரவீந்திரன், எழிலன் நாகநாதன், கார்த்திகேய சிவசேனாபதி, தமிழரசி ரவிக்குமார், சந்தானம், சுரேஷ் சம்பந்தம் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

12 பேர் கொண்ட இந்த குழு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் அறிக்கையை தயாரித்து அளிக்கும்.. சங்கங்கள், வணிக அமைப்புகள், மக்களின் கருத்தை பெற்று அந்தந்த தொகுதிகளின் தேவை அறிந்த தேர்தல் அறிக்கை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிக்கை தொடர்பாக மக்களின் கருத்துகளை பெறுவதற்கான பிரத்யேக செயலியை முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.. மேலும் வாட்ஸ் அப் எண், சமூக வலைதளங்களையும் முதல்வர் தொடங்கி வைத்தார். திமுக தேர்தல் அறிக்கை தொடர்பாக மக்கள், வணிகர், அரசு ஊழியர், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துகளை பெறுவதற்காக இந்த செயலி தொடங்கப்பட்டுள்ளது. இந்த செயலியில் அனைத்து தரப்பினரும் தங்கள் கருத்தை தெரிவிக்கலாம். பொதுமக்கள் தங்கள் கருத்துகள், பரிந்துரைகளை வழங்கலாம்..

தேர்தல் அறிக்கை குழு வரும் 8-ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் பயணம் செய்து பொதுமக்களின் கருத்துகளை கேட்க உள்ளது.. இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையிலும், தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள செயலிகள் மற்றும் வலைதளங்களில் வரும் ஆலோசனைகள் பரிந்துரைகளின் அடிப்படையிலும் திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும் என்று கூறப்படுகிறது..

Read More : “ திராவிடத்தை முதலில் எதிர்த்தவரே திருமா தான்.. இன்று தேவைக்கு ஏற்ப மாற்றி மாற்றி பேசி வருகிறார்..” சீமான் காட்டம்..!

RUPA

Next Post

வெனிசுலா மீது அமெரிக்கா திடீர் தாக்குதல்.. போர் பதற்றம் அதிகரிப்பு... அவசரநிலை பிரகடனம்..!

Sat Jan 3 , 2026
வெனிசுலா தலைநகர் கராகஸில் அமெரிக்கா தீடீர் தாக்குதல் நடத்தியதை அடுத்து அங்கு போர் பதற்றம் அதிகரித்துள்ளது.. கராகஸ் வான்பரப்பில் அமெரிக்க விமானங்கள் பறந்த நிலையில், 7 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.. அமெரிக்காவின் இந்த தாக்குதலை வெனிசுலா அதிபர் மதுரோ உறுதி செய்தார்.. இன்று அதிகாலை கராகஸில் பல வெடிப்புச் சத்தங்கள் கேட்டதையடுத்து, அமெரிக்கா மேற்கொண்ட “இராணுவத் தாக்குதலை” தாம் நிராகரிப்பதாக வெனிசுலா அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து […]
venezuela

You May Like