நெருங்கும் தேர்தல்..!! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!! மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்..!! இன்று முக்கிய முடிவு..!!

Central govt staff 2025

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டகாலக் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக, அரசுக்கும் ஆசிரியர் சங்கங்களுக்கும் இடையிலான மோதல் போக்கு தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்ற அதிருப்தியில், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு வரும் ஜனவரி மாதம் 6-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கப்போவதாக அறிவித்துள்ளது.


2004-ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் புதிய ஓய்வூதியத் திட்டம், தங்களின் எதிர்காலத்திற்குப் பாதுகாப்பானது அல்ல என்பது அரசு ஊழியர்களின் பிரதானக் குற்றச்சாட்டாக உள்ளது. இது தொடர்பாக திமுக அரசு அமைத்த குழுக்களின் முடிவுகள் இன்னும் இழுபறியிலேயே இருப்பதால், கடந்த டிசம்பர் 13-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஜாக்டோ-ஜியோ நடத்தியது. அதன் தொடர்ச்சியாகவே, முறைப்படி நோட்டீஸ் வழங்கிவிட்டு ஜனவரி 6 முதல் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட அவர்கள் தயாராகி வருகின்றனர்.

அமைச்சர்கள் குழுவுடன் முக்கியப் பேச்சுவார்த்தை :

இந்தச் சூழலில், போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்து சமரசத்தை எட்டும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது. இதற்காக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் குழு, இன்று (டிசம்பர் 22, 2025) காலை 10 மணியளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை கேட்டறிய உள்ளனர்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படாத நிலையில், இன்றைய ஆலோசனைக் கூட்டமாவது அரசு ஊழியர்களின் போராட்டத்தை நிறுத்துமா அல்லது மீண்டும் இழுபறியிலேயே முடியுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Read More : சொந்த தொழில் தொடங்க ஆசையா..? ரூ.15 லட்சம் வரை மானியத்துடன் கடனுதவி..!! தமிழ்நாடு அரசின் அசத்தல் திட்டம்..!!

CHELLA

Next Post

அமமுகவுக்கு மிரட்டல்..? டென்ஷன் ஆன டிடிவி தினகரன்..! பரபர ப்ரஸ் மீட்..

Mon Dec 22 , 2025
Threat to AMMK..? TTV Dinakaran tense..! Parapara press meet..
ttv dinakaran2234 1595052218

You May Like