அதிமுக தலைமைக்கு எதிராக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கி உள்ளார்.. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்களை ஒன்றிணைத்தால் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று கடந்த செப்டம்பர் மாதம் அவர் தெரிவித்தார்.. மேலும் 10 நாட்களுக்குள் இபிஎஸ் அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணிகளை தொடங்க வேண்டும் என்றும் அவர் காலக்கெடு விடுத்தார்…
ஆனால் அதற்கு அடுத்த நாளே செங்கோட்டையனை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.. எனினும் செங்கோட்டையன் விதித்த காலக்கெடு முடிவடைந்த நிலையில் செங்கோட்டையன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தார்..
இந்த சூழலில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 11-வது ஜெயந்தி மற்றும் குரு பூஜையை ஒட்டி ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் 3 பேரும் கூட்டாக தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.. இதை தொடர்ந்து மூன்று பேரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.. அப்போது அதிமுகவை ஒன்றிணைக்க மீண்டும் சபதம் எடுத்துள்ளதாகவும், திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி அம்மாவின் ஆட்சியை மீண்டும் அமைக்க உறுதிப்பூண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்..
இதையடுத்து அதிமுக கட்சியில் இருந்தே செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.. இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன் தன்னை அதிமுகவில் இருந்து நீக்கியதை வழக்கு தொடரப்படும் என்று கூறியிருந்தார்.. மேலும் இபிஎஸ் அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளர் மட்டுமே என்றும் தெரிவித்திருந்தார்..
இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். மேலும் “ நிலுவையில் உள்ள இரட்டை இலை சின்ன விவகாரத்தில் விசாரணை நடத்த வேண்டும்.. எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குவதாகக் கூறும் அதிமுகவின் பிரிவு உண்மையான கட்சி அல்ல.. அதிமுகவின் உண்மை நிலை என்னவென்பதை நிரூபிக்க கால அவகாசம் வேண்டும்..” என்று அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். செங்கோட்டையனின் இந்த கடிதம் தமிழக அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது..
Read More : Flash : குட்நியூஸ்.. இன்று தாறுமாறாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதோ..!



