மனித பிறவி எடுப்பதற்கு காரணமாக அமைவது நம்முடைய முன் ஜென்ம கர்ம வினைகளே என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்தக் கர்ம வினைகளின் அடிப்படையில் தான் ஒருவருடைய ஜாதகமும் அமைகிறது. அவ்வாறு அமையப்பெறும் ஜாதகத்தில் பலருக்கும் பல்வேறு விதமான தோஷங்கள் இருப்பது இயல்பு. இந்தத் தோஷங்களால் வாழ்க்கையில் தொடர்ச்சியான பல பிரச்சனைகளையும், தடைகளையும் சந்திக்க நேரிடுகிறது. எனவே, தொடர்ச்சியாக ஒரே விஷயத்தில் சிக்கல்களைச் சந்திப்பவர்கள், முதலில் தகுந்த ஜோதிடரை அணுகித் தங்கள் ஜாதகத்தை ஆராய்ந்து, அதில் உள்ள தோஷங்கள் என்னென்ன என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம்.
ஜாதகத்தில் உள்ள பலதரப்பட்ட தோஷங்களை முழுமையாக நிவர்த்தி செய்வதற்கு, துர்க்கை அம்மன் வழிபாடு மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, சில குறிப்பிட்ட நாட்களில் துர்க்கை அம்மனுக்குத் தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலம் ஜாதகத்தில் இருக்கும் கடுமையான தோஷங்கள் கூட நீங்கும் என்று ஆன்மீக நூல்கள் கூறுகின்றன.
ராகு காலத்தில் எலுமிச்சை தீபம் : பொதுவாக, துர்க்கை அம்மன் வழிபாடு என்றாலே, ராகு காலத்தில் ஆலயத்திற்குச் சென்று எலுமிச்சை பழ தீபம் ஏற்றுவது தான் பலரின் நினைவுக்கு வரும். குறிப்பாகச் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இந்த வழிபாட்டைப் பெண்கள் மேற்கொள்வது வழக்கம்.
ஆனால், ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, தங்களுக்கு இருக்கும் தொடர்ச்சியான சிக்கல்கள் மற்றும் ஜாதக தோஷங்கள் நீங்க, துர்க்கை அம்மனை செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரண்டு நாட்களிலும் ராகு காலத்தில் வழிபாடு செய்ய வேண்டும்.
வழக்கம்போல், ராகு காலத்தில் ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி, சாறு நீக்கி, குப்புறத் திருப்பி வைத்து, மஞ்சள் குங்குமம் இட்டு, நல்லெண்ணெய் ஊற்றிப் பஞ்சுத் திரி போட்டுத் தீபம் ஏற்ற வேண்டும். இதில் கூடுதலாக ஒரு ரகசியப் பரிகாரத்தைச் செய்ய வேண்டும். ஜாதக தோஷம் நீங்குவதற்கு, நீங்கள் ஏற்றும் ஒவ்வொரு தீபத்திலும் மூன்றே மூன்று மிளகுகளைச் சேர்க்க வேண்டும்.
இவ்வாறு, ஒவ்வொரு விளக்கிலும் 3 மிளகுகள் வீதம் சேர்த்துத் தீபம் ஏற்றி, முழு நம்பிக்கையுடனும் பக்தியுடனும் துர்க்கை அம்மனை வழிபடும்போது, ஜாதகத்தில் இருக்கக்கூடிய எப்பேர்ப்பட்ட தோஷமாக இருந்தாலும் அது நிவர்த்தி அடையும். சாதாரண தோஷமாக இருந்தால் ஒன்பது வாரங்களும், அதிகப்படியான தோஷங்கள் இருக்கும்பட்சத்தில் அதற்கேற்றவாறு வாரங்களை அதிகரித்தும் இந்த வழிபாட்டை தொடரலாம்.
நம் வாழ்வில் உள்ள எதிர்மறை ஆற்றல்களையும் தீய சக்திகளையும் விலக்கக்கூடிய துர்க்கை அம்மனை இந்தச் சிறப்பு நாட்களில் வழிபாடு செய்து, ஜாதக தோஷங்களை நீக்கிக் கொள்ளலாம்.
Read More : Alert: தமிழகத்தில் இன்று வடகிழக்கு பருவமழை…! சென்னை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் கனமழை…!



