சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய் எபிசோட்டில் சிந்தாமணி தான் கிரிஷை கடத்த சொன்னது என்ற உண்மை முத்துக்கு தெரிய வருகிறது. பிறகு கிரிஷை கூட்டிக்கொண்டு வீட்டிற்கு முத்து வரும்போது அண்ணாமலை என்னாச்சு என்று கேட்க, க்ரிஷ் கடத்தப்பட்ட விஷயத்தை சொல்கிறார். சிந்தாமணி இதை ஏன் செய்யனும் என அண்ணாமலை கேட்க, கடத்தியது மட்டும் தான் சிந்தாமணி, அவளை ஏவி விட்ட அம்பு நம்ம அம்மா தான் என்கிறாள்.
கிரிஷ் இந்த வீட்டில் இருப்பது பிடிக்காமல் அவனை சிந்தாமணியிடம் சொல்லி கடத்த சொன்னதே அம்மா தான் என முத்து சொன்னதும், அண்ணாமலை உட்பட அனைவரும் ஷாக் ஆகிறார்கள். உண்மை தெரிந்ததால் அச்சத்தில் நிற்கும் விஜயாவை பளார் என அறைய செல்கிறார் அண்ணாமலை. அப்போது அவரை அனைவரும் தடுத்து நிறுத்தி விடுகிறார்கள். பின்னர் விஜயாவை திட்டுகிறார் அண்ணாமலை.
விஜயாவின் இந்த செயலால் டென்ஷன் ஆன அண்ணாமலை, முத்துவிடம் போலீசுக்கு போன் போட்டு வர சொல்கிறார். இவளையெல்லாம் ஜெயிலில் போட்டால் தான் புத்தி வரும் என அண்ணாமலை சொல்ல, தான் கடத்த சொல்லவில்லை என்றும் ஆசிரமத்தில் விட்டுவிடுமாறு சொன்னதாகவும் விஜயா சமாளிக்கிறாள். பின்னர் இனிமேல் இப்படியெல்லாம் பண்ணமாட்டேன் என விஜயா சொன்னதை அடுத்து அவரை மன்னித்துவிடுகிறார் அண்ணாமலை.
மறுபுறம் கிரிஷை மனோஜுடன் நெருக்கமாக்க அவனை இனி மனோஜ் ரூமில் படுக்க வைக்க மீனா ரோகிணியிடம் சொல்கிறாள். இதனைக்கேட்டு அதிர்ச்சியாகும் ரோகிணி, எப்படிங்க அது முடியும் என்று கேட்கிறாள். அதற்கு மீனா, இதுக்கு மேலயும் இந்த விஷயத்தை தள்ளிப்போட முடியாது. சீக்கிரம் இதுக்கெல்லாம் ஒரு முடிவு வரனும் என ரோகிணியை மிரட்டுகிறாள். இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.



