மருமகளுடன் ஆசை தீர உல்லாசமாக இருந்த மாமனார்..!! குறுக்கே வந்த மகன்..!! போலீசிடம் கட்டுக்கதையை அவிழ்த்துவிட்ட தந்தை..!!

Sex 2025 5

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தனது கள்ள உறவுக்குத் தடையாக இருந்த மகனை, தந்தையே சதி செய்து கொலை செய்துவிட்டு, மகனை மிருகம் தாக்கியதாக நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சௌரப் (30) என்ற இளைஞர் அவரது பெற்றோர் மற்றும் மனைவியுடன் வசித்து வந்தார். இந்நிலையில், சௌரப்பின் உடல் கரும்புத் தோட்டத்தில் மர்மமான முறையில் கண்டெடுக்கப்பட்டது. சௌரப்பின் தந்தை சுபாஷ் (60), தனது மகனை காட்டு மிருகம் தாக்கியதால்தான் இறந்துவிட்டான் என்று காவல்துறையினரிடம் கூறியதோடு, ஆரம்பத்தில் யாரும் சந்தேகப்படாதபடி நாடகமாடியுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்திய காவல்துறையினருக்கு சில சந்தேகங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, சௌரப்பின் மரணத்தில் இயற்கைக்கு மாறான சூழல் இருந்ததால், போலீசார் சௌரப்பின் குடும்பத்தினரைத் துருவித் துருவி விசாரித்தனர்.

காவல்துறையின் விசாரணையில், தந்தை சுபாஷுக்கும், அவரது மகன் சௌரப்பின் மனைவிக்குமிடையே (மருமகள்) நீண்ட நாட்களாக கள்ள உறவு இருந்து வந்தது தெரியவந்துள்ளது. இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர்.

இவர்களின் இந்த உறவுக்கு, சௌரப் இடையூறாக இருந்ததோடு, அவர்களது செயல்பாடு குறித்து தந்தை மற்றும் மனைவி மீது தொடர்ந்து கேள்வியெழுப்பி வந்துள்ளார். இதனால், இந்தக் கள்ளக்காதல் ஜோடி, சௌரப்பை கொலை செய்ய திட்டமிட்டது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.

அதன்படி, தந்தை சுபாஷே தனது மகனை சாமர்த்தியமாக சதி செய்து கொலை செய்துவிட்டு, கவனத்தை திசை திருப்பும் வகையில், ஒரு வனவிலங்கு தாக்கியதாக பொய்யான கதையை அவிழ்த்துவிட்டு நாடகமாடியது அம்பலமானது. இதனையடுத்து, மகனை கொடூரமாக கொலை செய்த தந்தை சுபாஷை காவல்துறையினர் கைது செய்து, இந்த குற்றச் செயலில் மருமகளுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : திருமண காப்பீடு பற்றி தெரியுமா..? என்னென்ன நிகழ்வுகளுக்கு கிளைம் செய்ய முடியும்..?

CHELLA

Next Post

"அவனை என் அருகில் வர விடாதீங்க" ரசிகரிடம் கோபப்பட்ட பாலகிருஷ்ணா! வைரல் வீடியோ..!

Thu Nov 20 , 2025
நடிகரும் அரசியல்வாதியுமான நந்தமூரி பாலகிருஷ்ணா சமீபத்தில் விசாகப்பட்டினம் சென்றதாக வெளியான ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது அவர் தனது புதிய படமான அகண்டா 2 படத்தின் புரமோஷன் பணியில் ஈடுபட்டிருந்தார்.. அப்போது. இயக்குனர் போயபட்டி ஸ்ரீனு, நடிகை சம்யுக்தா ஆகியோரும் அவருடன் இருந்தனர். விமான நிலையம் வந்தபோது, அவர்களை வரவேற்க பெரும் எண்ணிக்கையில் ரசிகர்கள் கூடினர். முதலில், ரசிகர்களை சந்தித்து புன்னகையுடன் மலர்கள் வாங்கி மகிழ்ச்சியாக இருந்தார் […]
bala krishna

You May Like