தேனி மாவட்டம் முத்துத்தேவன்பட்டி கிராமத்தில், ராமகிருஷ்ணன் என்ற இயற்பெயருடன் பிறந்த வையாபுரி, நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளார். பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, தேனியில் ஒரு மருத்துக் கடையில் வேலை பார்த்தார். அப்போது ஏற்பட்ட திரையுலக ஆர்வம் அவரை சென்னைக்கு அழைத்துச் சென்றது.
முதலில் ‘சின்ன மருது பெரிய மருது’, ‘மால்குடி டேஸ்’ போன்ற தொடர்களில் நடித்து பிரபலமானார். பின்னர், நடிகர் விவேக் மூலம் ‘இளைய ராகம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். ஆனால், அவருக்குப் பெரிய பெயரை வாங்கிக்கொடுத்தது ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தில் அவர் ஏற்ற திருநங்கை கதாபாத்திரம் தான்.
பிறகு, தமிழ், தெலுங்கு, மலையாளம் என சுமார் 250-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, முன்னணி நடிகர்களுடன் இணைந்து நகைச்சுவையில் அசத்தினார். விஜய் டிவியின் ‘பிக் பாஸ்’ முதல் சீசனில் போட்டியாளராகவும் பங்கேற்று, மேலும் பிரபலமடைந்தார்.
திரைத்துறையில் கிடைத்த புகழ், சொந்த வாழ்க்கையில் வையாபுரிக்குச் சில சவால்களை ஏற்படுத்தியது. பல இடங்களில் பெண் பார்த்தும் திருமணம் தள்ளிப்போனது. பின்னர் 2001-ஆம் ஆண்டு ஆனந்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஷ்ரவன் என்ற மகனும், ஷிவானி என்ற மகளும் உள்ளனர்.
ஷ்ரவன் பிடிஎஸ் பட்டம் பெற்ற நிலையில், மேலும் படிக்க விரும்பியதால், அவரை ஹைதராபாத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் எம்டிஎஸ் ஆர்த்தோ பட்டப்படிப்பில் சேர்த்துள்ளார் வையாபுரி. தனது தந்தையின் செல்வாக்கைப் பயன்படுத்தாமல், மருத்துவத் துறையைத் தேர்ந்தெடுத்த ஷ்ரவனின் முடிவுக்கும், மகனின் கனவை நனவாக்கிய வையாபுரிக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Read More : லாட்ஜில் ரூம் போட்ட இளம் காதல் ஜோடி..!! உல்லாசத்திற்கு பின் நடந்த மர்ம சம்பவம்..!! சென்னையில் அதிர்ச்சி..!!