“களத்தில் இவன் இருக்கும் வரையே இருக்கும் பயமே..” ஜனநாயகன் படத்தின் 2-வது பாடல் வெளியானது..! கொண்டாடும் விஜய் ரசிகர்கள்..!

jananayagan second single 1

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய் தனக்கென கோடிக்கணக்கான ரசிகர்களை உருவாக்கி வைத்திருக்கிறார் விஜய்.. அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும் வலம் வருகிறார்.. விஜய் நடிப்பில் கடைசியாக கோட் படம் வெளியானது.. இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அவர் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார்..


அரசியல் தலைவராக மாறி உள்ள விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன் தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஜனநாயகன் படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.. மேலும் பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன், பிரியா மணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்..

இந்த படத்தை கேவிஎன் புரொட்க்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.. இந்த அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. சமீபத்தில் ஜனநாயகன் படத்தின் போஸ்டர், முதல் சிங்கிள் ஆகியவை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.. இந்த சூழலில் ஜனநாயகன் படத்தின் 2-வது பாடல் இன்று வெளியாகும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.. மேலும் இந்த பாடலுக்கான புரொமோவும் வெளியானது..

இந்த நிலையில் ஜனநாயகன் படத்தின் 2-வது பாடலான ’ ஒரு பேரா வரலாறு’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.. விஜய் ரசிகர்கள் எப்போதும் போல இந்த பாடலை கொண்டாடி தீர்த்து வருகின்றனர்..

Subscribe to my YouTube Channel

இதனிடையே ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 27-ம் தேதி மலேசியாவில் நடைபெற உள்ளது. மலேசிய தலைநகர் கோலாம்பூரில் உள்ள புகிட் ஜலில் அரங்கில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

Read More : Year Ender 2025 : பிரம்மாண்ட பட்ஜெட்.. உச்ச நடிகர்கள்.. ஆனாலும் அட்டர் ஃபிளாப் ஆன படங்கள்..!

RUPA

Next Post

விஜய் குறித்த கேள்வி.. ஒரே வரியில் 'நச்' பதில் சொன்ன உதயநிதி! என்ன இப்படி சொல்லிட்டாரு..!

Thu Dec 18 , 2025
தவெக தலைவர் விஜய் இன்று ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.. திமுகவை கடுமையாக விமர்சித்த அவர் “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதா மேடமும் ஒரே வார்த்தையில் திமுகவை காலி செய்தனர்.. ஏன் இவ்வளவு கடுமையாக விமர்சிக்கிறார்கள் என்று யோசிப்பேன்.. அவர்கள் சொன்னதையே நானும் சொல்கிறேன்.. திமுக ஒரு தீய சக்தி என பல முறை ஆக்ரோஷமாக முழங்கினார் விஜய்.. திமுக தீய சக்தி என ஜெயலலிதா […]
vijay udhayanidhi 1

You May Like