பிரபல திரைப்பட இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் திடீர் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் 1970கள் மற்றும் 80களில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வந்தவர் சங்கர் கணேஷ். இவர், தனது திறமையான இசையால் பல திரைப்படங்களுக்கு உயிர் கொடுத்துள்ளார். இவர் இசையமைத்த பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன. தற்போது வயது மூப்பின் காரணமாக திரையுலகில் அவருக்கு வாய்ப்புகள் குறைந்துள்ளன.
இந்நிலையில், சென்னையில் வசித்து வரும் இவர், இன்று திடீரென மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்த கூடுதல் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் எனத் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
Read More : திடீரென மயக்கம் போட்டு சரிந்து விழுந்த ரோபோ சங்கர்..!! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!! என்ன ஆச்சு..?