திருப்பத்தூர் மாவட்டம் நாற்றம்பள்ளி பகுதியைச் சேர்ந்த 28 வயது சந்தியா என்ற இளம்பெண், கணவர் சிவா பெங்களூருவில் வேலை பார்த்ததால் தனியாக வசித்து வந்தார். இதை சாதகமாக்கிக் கொண்டு குமரேசன் மற்றும் விக்னேஷ் ஆகிய 2 ஆண்களுடன் சந்தியா கள்ளத்தொடர்பு வைத்திருந்தார்.
ஒரு நாள் இரவு, சந்தியாவின் வீட்டிற்கு வந்த குமரேசன், சந்தியாவுக்கு விக்னேஷுடன் தொடர்பு இருப்பது அறிந்து ஆத்திரமடைந்தார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, கோபமடைந்த குமரேசன், சந்தியாவை கடுமையாகத் தாக்கியுள்ளார்.
இதில் சந்தியா மயங்கி விழுந்ததும், குமரேசன் அவரை பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், அங்கிருந்து தப்பியோடிவிட்டார். சில மணி நேரம் கழித்து, அதே வீட்டிற்கு வந்த விக்னேஷ், மயங்கி கிடந்த சந்தியாவை பார்த்து அதிர்ச்சி அடைந்தான். பிறகு அவனும் சந்தியாவை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
மறுநாள் காலை, பொதுமக்கள் சந்தியாவின் உடலை அலங்கோலமாக கண்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சந்தியாவின் தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்ததில், குமரேசன் மற்றும் விக்னேஷ் இருவருடனும் சந்தியா நெருக்கமாக இருந்தது தெரியவந்தது. விசாரணையில், இருவரும் அடிக்கடி சந்தியாவின் வீட்டிற்கு வந்து சென்றது உறுதியானது.
இதற்கிடையே, பெங்களூருவில் இருந்து வந்த சந்தியாவின் கணவர் சிவா, தனது மனைவியின் மரணம் மற்றும் கள்ளத்தொடர்பு குறித்து தெரியவந்த நிலையில், அதிர்ச்சி அடைந்தார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.