பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா, இன்று தனது 89 வயதில் மறைந்தார். அவரின் மறைவுக்கு பல்வேறு திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.. அவர் மறக்க முடியாத சினிமா வரலாறை மட்டும் அல்ல, கடின உழைப்பில் உருவாக்கிய பெரும் செல்வத்தையும் விட்டுச் சென்றுள்ளார். 60 ஆண்டுகளுக்கும் மேலான தனது நீண்டகால திரைப்பட வாழ்க்கையில், சுமார் ரூ.450 கோடி மதிப்புள்ள ஒரு பேரரசை உருவாக்கி உள்ளார்..
மறைந்த நடிகர் தர்மேந்திராவின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.450 கோடி என்று கூறப்படுகிறது.. பாலிவுட்டின் “ஹீ-மேன்” என அழைக்கப்பட்ட அவர், மிகவும் சாதாரண பின்னணியில் இருந்து இந்திய திரைப்பட உலகின் நிலைத்திருக்கும் மற்றும் அதிகம் சம்பளம் பெற்ற நட்சத்திரங்களில் ஒருவராக உயர்ந்தார்.
தர்மேந்திராவின் மிகவும் சிறப்புமிக்க சொத்து அவரது லோனாவாலாவில் உள்ள 100 ஏக்கர் பரப்பளவுள்ள விசாலமான பண்ணை வீடு. மும்பையின் சத்தத்திலிருந்து தூரமாக அமைந்த இந்தச் சொத்து அவருக்கான அமைதிக் கோயில் போன்றது. இதில் செழித்த இயற்கை பண்ணைகள், தனியார் நீச்சல் குளம், மற்றும் அனைத்து வசதிகளும் கொண்ட நவீன ஜிம் ஆகியவை அமைந்திருந்தன இயற்கை மீதும், உடற்பயிற்சி மீதும் அவர் கொண்டிருந்த ஆழமான பற்று இவற்றில் பிரதிபலித்தது.
தர்மேந்திரா மகாராஷ்டிரா முழுவதும் ரூ.17 கோடிக்கும் மேற்பட்ட மதிப்புள்ள ரியல் எஸ்டேட் சொத்துகளையும், மேலும் அவர் வாங்கிய ரூ.88 லட்சம் மதிப்புள்ள வேளாண்மை நிலங்களையும், ரூ.52 லட்சம் மதிப்புள்ள வேளாண்மை அல்லாத நிலங்களையும் வைத்திருந்தார். சமீப ஆண்டுகளில், அவரது பண்ணை வீட்டுக்கு அருகில் 12 ஏக்கர் நிலத்தில் 30 காட்டேஜ்கள் கொண்ட ஒரு லக்சுரி ரிசார்ட் அமைக்கத் திட்டமிட்டிருந்தார்.. அவரது கனவு திட்டமாக இது தற்போது அவரது பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக நினைவுகூரப்படுகிறது.
தர்மேந்திராவின் பயணம் 1960 ஆம் ஆண்டில் வெளியான Dil Bhi Tera Hum Bhi Tere என்ற படத்தின் மூலம் தொடங்கியது. அந்த படத்திற்கான அவரது சம்பளம் வெறும் ரூ51 மட்டுமே என கூறப்படுகிறது. இந்தச் சிறிய தொகையிலிருந்து ரூ.450 கோடியான பெரும் செல்வத்தை உருவாக்கிய அவரது வாழ்க்கை, ஒழுக்கம், பொறுமை, மற்றும் சினிமாவிற்கு அவர் கொண்டிருந்த மிகுதியான அன்பின் சான்றாக திகழ்கிறது. அவரின் செல்வம் நடிப்பின் மூலம் மட்டுமல்ல, ரியல் எஸ்டேட் முதலீடுகள் மற்றும் ஹாஸ்பிடாலிட்டி துறையிலும் வளர்ந்தது.
வாழ்க்கையின் கடைசி பத்தாண்டுகளில், தர்மேந்திரா உணவகத் துறையில் தீவிரம் காட்டினார். பிரபலமான Garam Dharam Dhaba-விற்கு பிறகு, 2022 இல் கர்னால் ஹைவேயில் ‘He-Man’ என்ற உணவகத்தை தொடங்கினார். தனது நட்சத்திரப் பெருமையை உணவக பிராண்டாக மாற்றிய இந்த முயற்சிகள், அவரது வருமானத்தை கணிசமாக உயர்த்தியதுடன், ரசிகர்களுடன் ஒரு தனித்துவமான தொடர்பையும் உருவாக்கியது.
தர்மேந்திரா ஸ்டைலிஷ் கார்கள் மீது மிகுந்த விருப்பம் கொண்டவர். அவரது ஆட்டோமொபைல் சேகரிப்பு அவரது வெற்றியையும் தனிப்பட்ட ருசியையும் பிரதிபலித்தது. அவரது இதயத்திற்கு மிக அருகினில் இருந்தது, அவர் முதலில் வாங்கிய கிளாசிக் ஃபியட் கார். அதன் பின்னர், பல லக்சுரி கார்கள் அவரது கேரேஜில் சேர்க்கப்பட்டன. அவற்றில் முக்கியமானவை:
ரேன்ஞ் ரோவர் இவோக் – சுமார் ₹85.74 லட்சம்
மெர்சிடீஸ்-பென்ஸ் SL500 – சுமார் ₹98.11 லட்சம்
இந்த கார் தொகுப்பு, அவரது நட்சத்திரத் தகுதியின் பெருமையையும் மேம்பாட்டையும் நேரடியாக பிரதிபலித்தது.
Read More : மறைந்த பழம்பெரும் நடிகர் தர்மேந்திராவின் உருக்கமான கடைசி இன்ஸ்டா பதிவு.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..!



