தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய் தனக்கென கோடிக்கணக்கான ரசிகர்களை உருவாக்கி வைத்திருக்கிறார் விஜய்.. அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும் வலம் வருகிறார்.. விஜய் நடிப்பில் கடைசியாக கோட் படம் வெளியானது.. இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அவர் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார்..
அரசியல் தலைவராக மாறி உள்ள விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன் தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஜனநாயகன் படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.. மேலும் பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன், பிரியா மணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்..
இந்த படத்தை கேவிஎன் புரொட்க்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.. இந்த அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..
ஜனநாயகன் படத்தின் புதிய போஸ்டரை நேற்று முன் தினம் படக்குழு வெளியிட்டது.. மேலும் இந்த படத்தில் முதல் பாடல் இன்று வெளியாகும் என்றும் அறிவித்திருந்தது.. ஒரே நாளில் பேக் டூ பேக் அப்டேட்களை வெளியிட்டதால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் சரியாக 6.03 மணிக்கு வெளியிடப்பட்டது.. தளபதி கச்சேரி என்ற இந்த பாடலை அனிருத், விஜய், அறிவு உள்ளிட்டோர் பாடி உள்ளனர்.. இந்த பாடலை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்..
Read More : அண்ணனுக்கு மாரடைப்பு.. மருத்துவமனைக்கு ஓடோடி சென்ற ரஜினிகாந்த்..!



