சட்டம் ஒழுங்கையே காக்க வக்கற்ற இந்த ஆட்சியை அகற்றுவதே , தமிழ்நாட்டை மீட்பதற்கான முதற்படி என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்..
திருநெல்வேலி மாவட்டம் பாப்பகுடி பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அங்கு காவல்துறையினர் விசாரணைக்கு சென்றுள்ளனர்.. பாப்பாக்குடி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் சண்முகசுந்தரம் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மாற்று சமூகத்தினருக்கும் இடையே நேற்று மோதல் ஏற்பட்டுள்ளது.. இந்த மோதல் குறித்து அறிவித்த பாப்பாக்குடி காவல் ஆய்வாளர் முருகன், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தார்..
அப்போது சிறுவன் சண்முகசுந்தரம் காவல் உதவி ஆய்வாளர் முருகனை அரிவாளால் தாக்க முயன்றுள்ளான்.. எதிர்பாராத இந்த தாக்குதலால் அதிர்ச்சி அடைந்த முருகன், தனது உயிருக்கு பயந்து, அருகில் இருந்த ஒரு வீட்டின் கழிவறைக்குள் சென்று தன்னை பாதுகாத்துக் கொண்டதாக கூறப்படுகிறது..
ஆனால் அப்போது சிறுவன், விடாமல் கழிவறையின் கதவை அரிவாளால் சரமாரியாக வெட்டி உள்ளான். இதனால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கருதிய காவல் ஆய்வாளர் முருகன் தற்காப்புக்காக தனது துப்பாக்கியால் சிறுவனின் வயிற்றுப்பகுதியை சுட்டுள்ளார்..
இதில் வயிற்றுப்பகுதியில் குண்டு பாய்ந்ததால் காயமடைந்த சிறுவன் பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.. சிறுவனின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.. இந்த சம்பவத்தில் உதவி ஆய்வாளருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து திமுக அரசை விமர்சித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “ திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடியில், கஞ்சா விற்பனை தொடர்பாக தகராறில் ஈடுபட்டிருந்த சிறுவர்களை தட்டிக் கேட்ட சார்பு ஆய்வாளரை அச்சிறுவர்கள் அரிவாளால் வெட்ட முயன்றதாகவும், சிறுவனை தற்காப்புக்காக சார்பு ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டதாகவும் வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அரிவாளுடன் சிறுவன் துரத்தியதால் , சார்பு ஆய்வாளர் ஒரு வீட்டின் கழிவறையில் ஒளிந்து கொண்டு இருந்தாகவும் , அங்கிருந்து தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.
ஸ்டாலின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எந்த அவல நிலைக்கு சென்றுள்ளது என்பதை இந்த செய்தி உணர்த்துகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கம் குறித்து தொடர்ந்து எச்சரித்து வந்துள்ளேன். சிறார்கள் வரை தற்போது போதைப்பொருளால் பாதிக்கப்பட்டு, குற்றச் செயலில் ஈடுபடுவது பெரும் வேதனைக்குரியது. சட்டம் ஒழுங்கையே காக்க வக்கற்ற இந்த ஆட்சியை அகற்றுவதே , தமிழ்நாட்டை மீட்பதற்கான முதற்படி!” என்று குறிப்பிட்டுள்ளார்..
Read More : பிரத்யேக உறுப்பினர் சேர்க்கை செயலி.. நாளை அறிமுகம் செய்கிறார் விஜய்.. தவெக அதிகாரப்பூர்வ அறிவிப்பு..